புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 21, 2022)

அழியாத மகிமையை நாடுங்கள்

பிலிப்பியர் 2:5

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;


தேவனாகிய கர்த்தர்தாமே, இஸ்ரவேல் ஜனங்களை, எகிப்தின் அடிமை த்தனத்திலிருந்து விடுதலையாக்கி, வனாந்திரத்திலே அவர்களை கூடா ரங்களில் குடியிருக்கப்பண்ணி, எக்குறையுமின்றி, அதிசயமாக அவர்களை வழிநடத்தி வந்தார். அந்த நாட்களை நினைவுகூரும்படிக்கு, இஸ்ரவே லர், ஏழுநாள் கூடாரங்களில் குடியிருந்து, கூடாரப் பண்டிகையை ஆசாரித்து வந்தார்கள். (லேவி 23:34-44, உபா 8:1-20). அந்த நாட்களிலே, திரளான ஜனங்கள் எருசலேமிற்கு வரு கை தருவார்கள். இப்படியாக ஆண்ட வர் இயேசு இந்த உலகிலே வாழ்ந்த நாட்களிலே யூதருடைய கூடாரப்பண் டிகை சமீபமாயிருந்தது. அப்பொழுது இயேசுவுடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும் படி, இவ்விடம் விட்டு யூதேயாவுக்குப்போம். பிரபலமாயிருக்க விரும்பு கிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான். நீர் இப்படி ப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். அவர்கள் இயேசுவோடு கூட வாழ்ந்திருந்தும், இயேசுவை யார் என்று அறியாததினாலே அப்படிச் தவறான எண்ணங் கொண்டார் கள். பிரியமானவர்களே, சகலத்தையும் படைத்த ஆண்டவர், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலாக ஏன் இந்தப் பூமிக்கு வந்தார்? (பிலி 2:6-7, யோவான் 1:1-12, கொலோ 1:15-17) பிரபல்யமடையும்படிக்காகவா? இல்லை, என்னுடையதும், உங் களுடையதும், மனிதகுலமனைத்தினுடையதும் பாவங்கள், சாபங்களை தம்மேல் ஏற்றுக்கொண்டு அவைகளை பரிகரிக்கும்படியாகவே வந்தார். அதை நிறைவேற்றி முடிக்கும் பொருட்டு, அவர் அசட்டைபண்ணப்ப ட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்ட வரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்;. பகிரங்க கோலமாய் அவரை சிலு வையிலே அறைந்தார்கள். எமது நிமித்தமாய் பலர் முன்னிலையிலே அவமானத்தையும் நிந்தையையும் அடைந்தார். நம்முடைய ராஜ்யமும் இந்தப் பூமிக்குரியதல்ல எனவே நாம் செய்யும் நற்கிரியைகளால், இந் தப் பூமியிலே நாம் புகழை சம்பாதித்துக் கொள்வதினாலும், பிரபல் யமாவதினாலும் உண்டாகும் பலன் அற்பமே. எனவே, நாம் நன்மை செய்து பாடநுபவிக்கும் போது, கிறிஸ்து நம்மில் வெளிப்படுவார். அந்த அழியாத மகிமையை தரித்துக் கொள்ளும்படிக்கு கிறிஸ்துவின் சிந்தை யைத் தரித்துக் கொள்ளுவோம்.

ஜெபம்:

மேலானவைகளையே நாடுங்கள் என்ற தேவனே, கிறிஸ்துவும் எனக்காய் பாடுபட்டது போல, நானும் அவருடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து, அழியாத மகிமையப் பெற்றுக் கொள்ள பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:20-21