புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 20, 2022)

பரலோக மேன்மையை நாடுங்கள்

கலாத்தியர் 6:7

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.


ஒரு வியாபார முகவர், தான் செய்து வரும் வியாபாரத்தை விரிவு படுத்தும்படிக்கு குறிப்பிட்ட ஊரொன்றுக்கு சென்றிருந்தார். அந்த ஊர் மக்களின் மத்தியிலே தன்னைக் குறித்த நல்லெண்ணத்தை எப்படி உண்டாக்கலாம் என்று ஆராய்ந்து சில தகவல்களை பெற்றுக் கொண்டார். அதன்படிக்கு, அந்த ஊரிலே இரு க்கும் அநாதையில்லமொன்றிற்கு நன்கொடையாக ரொக்கப்பணம் வழங்கினால், அந்த ஊர் மக்களின் மனதை கவர்ந்து கொள்ளலாம் என்று நோக்கத்துடன், குறிப்பிட்ட தொகைப் பணத்தை வழங்குதவற்கு ஒரு விழாவை ஏற்படுத்தி, அந்த ஊரிலுள்ள முக்கியமானவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தான். அந்த வியாபாரி எதிர்பார்த்தபடி, அவன் அந்த ஊர் மக்களில்; பலரின் நன்மதிப்பை பெற்றுக் கொண்டான். அவனுடைய வியாபாரமும் அந்த ஊரிலே வளர்நது பெருக ஆர ம்பித்தது. இந்த வியாபாரியின் தானதர்மங்களுக்கு ஒத்த காரியங்கள் இந்த உலகத்திலே பெரும் வரவேற்பையும் கரகோசங்களையும்; பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இத்தகைய தானதர்மமானது, இருதயங்களை ஆராய்ந்து, மனிதர்களுடைய யோசனைகளை அறிகின்ற தேவனுக்கு முன்பாக ஏற்புடையதாகுமோ? சுய இலாபம் கருதி, திக்கற்ற அந்த பிள்ளைகளை, தன்னுடைய வியாபாரத்தின் விளம்பரத்திற்காக பயன்படுத்தும்படி அந்த வியாபாரி துணிகரம் கொண்டான். இத்தகைய விளம்பரங்களும் முயற்சிகளும் எங்கள் சொந்த வாழ்;க்கையிலோ அல் லது சபையிலோ உட்பிரவேசிக்காதபடிக்கு நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும். செய்யும் நற்கிரிகையின் பலன் அவர்களின் சுய இலாபமாகவே இருக்கின்றது. பிரியமானவர்களே, ஒரு மனி தனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான். எனவே நம்முடைய சிந்தையானது கிறிஸ்துவினிடம் இருந்த சிந்தையாக இருக்க வேண்டும். இந்த உலகத்திற்குரியதும், அழிந்து போவதுமான இழிவான ஆதயத்துக்காக நற்கிரியைகளை நடத்துகின்றவர்களைப் போல நாம் தானதர்மங்களை செய்யாமல். கிறிஸ்துவை நம் மிலே தரித்துக் கொள்ள வேண்டும். இந்த பூவுலகிலே நம்முடைய எல்லைகளை விஸ்தாரப்படுத்துவதற்காக அல்ல, தேவனுடைய ராஜ்யத் தின் மேன்மைக்காக தாழ்மையுள்ள இருதயத்தோடு, பிதாவின் நாமம் மகிமைப்படும்படிக்கு நற்கிரியைகளை நடப்பிக்கின்றவர்களாக இருக்க வேண்டும். இவைகளே மேன்மையான பலனைத் தரும்.

ஜெபம்:

என்னுடைய சிந்தையை அறிந்த தேவனே, என் எண்ணங்களும், வார்த்தைகளும், கிரியைகளும் பரலோகத்தின் அங்கீகாரத்தை பெற்றதாக இருக்கும்படிக்கு என்னை நீர் வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:4-5