புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 19, 2022)

மனவிருப்பமும் செய்கையும்...

2 பேதுரு 1:10

உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்


இந்த உலகிலே வாழ்ந்து கடந்து சென்ற சில பரிசுத்தவான்களின் அனு பவ சாட்சிகளை நாம் படிக்கும் போது, அவர்கள் பிரத்தியேகமாக, குறி ப்பிடப்பட்ட ஒரு சேவைக்காக தேவனாலே தெரிந்து கொள்ளப்பட்டிக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது. சாமுவேல், ஏரேமியா, ஆண்டவர் இயேசுவின் தாயாகிய மரியாள், யோவான்ஸ்நானன் மற்றும் ஆண்டவர் இயேசுவினால் தெரிந்து கொள்ளப்பட்ட அப்போஸ்தலர்கள் போன்றவர்களை நாம் சில உதாரணங்களாக பார்க்கலாம். இன்றைய உலகிலும் கூட, சில தேவ ஊழியர்கள்; போதைவஸ்து, மதுபானம், விபச்சாரம் போன்ற பாவங்களு க்கு அடிமைப்பட்டவர்கள் மத்தியிலே ஊழியம் செய்து வருகின்றார்கள். வேறு சிலர், கிறிஸ்துவின் நற்செய்திக்காக, நாஸ்திக ஆட்சியுள்ள நாடு களிலே ஆண்டவர் இயேசவின் மீட்பின் நற்செய்தியை அறிவிக்கும்படிக்குச் செல்கின்றார்கள். அங்கே, அவர்களுக்கு பல பாடுகளும், உபத்திரவங்களும் இருக்கும் என்பதை அறிந்தும், அந்த ஊழியத்திற்கு தங் களை தியாகமாக ஒப்புக் கொடுத்திருக்கின்றார்கள். எப்படிப்பட்ட அழைப்பை பெற்றிருந்தாலும், அவரவர் தங்கள் அழைப்பை நிறைவேற்றத்தக்கதான பெலத்தையும், வழிநடத்துதலையும், வரங்களையும் பரிசுத்த ஆவி யானவர் அவர்களுக்கு கிருபையாய் கொடுக்கின்றார். தேவ அழைப்பும், கிருபையும், ஆவியானவரின் வழிநடத்துதலும் இல்லாமல் ஒருவரும் தங் கள் அழைப்பை நிறைவேற்ற முடியாது. உதாரணமாக, விபச்சாரத்திற்கு அடிமைபட்டவர்கள் மத்தியிலே, ஊழியம் செய்பவர்கள், பாவத்தில் விழுந்துவிடாமல், தங்கள் பரிசுத்தத்தை காத்துக் கொள்வதற்கு, தேவனுடைய வரம் இன்றியமையாதது. எனவே திக்கற்ற பிள்ளைகள் விதவை கள், ஒடுக்கப்பட்டோருக்கு நாம் அவ்வவ்போது நம்முடைய பெலத்தின்படி உதவி செய்து வருகின்றோம். சில வேளைகளிலே அந்த திட்டங்களை செய்பவர்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றோம். ஆனால், அதை பெரிய திட்டமாக்கி, பாரியளவிலே செய்ய வேண்டும் என்னும் எண்ணம் உங்களுக்கு உண்டானால், அதற்கு நீங்கள் தேவ அழைப்பை பெற்றிரு க்கின்றீர்களா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவற்றை அறிந்து கொள்வதற்கும், பெற்ற அழைப்பானது எதுவாக இருந்தாலும் அதை தேவசித்தப்படி நிறைவேற்றி முடிப்பதற்கும், நம்மு டைய வாழ்வானது, தேவ வார்த்தைக்குள் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கு அடித்தளமாக வேதத்தின் தியானமும் ஜெபமும் இருக்கின்றது.

ஜெபம்:

தேவ சித்தத்தை நிறைவேற்றி முடிக்க என்னில் விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்கும் தேவனே, என்னுடைய அழைப்பை நான் உறுதி செய்து அதை நிறைவேற்றி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலி 2:12-13