புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 18, 2022)

ஒப்புவிக்கப்பட்ட நற்பொருள்

2 தீமோத்தேயு 1:14

உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த சிறு பையனானவன், அந்த அயலிலேயு ள்ள சில வயோதிபர்களுக்கு தன்னால் முடிந்தளவு வேலைகளைச் செய்து அவர்களுக்கு உதவி வந்தான். இதினிமித்தம் அந்த அயலிலே வாழ்ந்த மனிதர்கள் மத்தியலே அவனுக்கு நற்பெயர் இருந்தது. மாதங்கள் கட ந்து சென்ற போது, அந்த பையனானவன், இன்னும் பல உதவிகளை தான் செய்ய வேண்டும் என்ற விருப்;பமுள்ளவனாக இருந்தான். ஆனால், அவன் தன்னுடைய வீட்டுக் கடமை களிலும், பாடசாலை படிப்பிலும் தவ றிப்போவதை கண்ட அவனது அவ னில் கரிசணை கொண்டார்கள். அது மட்டுமல்லாமல், அவன் சிறு பைய னாக இருந்ததினால், அந்த அயலி லுள்ள சில இடங்களு க்கு தனித்து செல்வது அவனுடைய பாதுகாப்பி ற்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதையும் கண்டு கொண்டார்கள், தங்கள் பிள்ளையானவனை நல் லொழுக்கதில் நடத்தி, அவனுடைய கடமைகளை குறித்த காரியத்தில் அவனுக்கு அறிவு புகட்டி, அவனிடமிருந்த நற்பண்புகளையும் தளர்ந்து போகாதபடிக்கு காத்துக் கொண்டார்கள். பிரியமானவர்களே, சிறுமைப் பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்னும் நற்பண்பானது உங்களிடம் இருந் தால், அதை ஒருபோதும் விட்டுவிடாதிருங்கள் ஆனால் முதலாவதாக உங்கள் ஆத்துமா கறைப்படாதபடிக்கு, தேவ வார்த்தையின் ஒழுங்கி ன்படிக்கு உங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு, அந்த வாழ்விற்குள்ளாகவே உங்கள் தானதர்மங்களையும் உதவிகளையும் செய்யுங்கள். தேவை யுள்ளவர்களுக்கு உதவி செய்யாதிருப்பதற்கு சாட்டுப் போக்குகளை கூறுவதற்காக நான் ஜெபம் செய்கின்றேன் என்று கூறிவிட முடியாது. ஒருவனுக்கு நன்மை செய்யக் கூடிய சந்தர்பமுடையவனாகவும், நன்மை செய்யும்படியான பெலனுடையவனாகவும் இருக்கும் போது, அதை அவன் செய்யாதிருந்தால் அது அவனுக்கு பாவமாகவே இருக்கும். அழியாத வித்தாகிய தேவனுடைய சத்திய வார்த்தையாகிய நற்செய்தி யானது நமக்குள்ளே ஒப்புவிக்கப்பட்டிருக்கின்றது. திவ்விய சுபாவ த்திற்குரிய நற்கிரியைகள் யாவும் அதற்குள்ளே அடங்கியிருக்கின்றது. ஒப்புவிக்கப்பட்ட அந்த பொக்கிஷத்தை பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள்ளுங்கள். இரவும் பகலும் வேதத்தை தியானியுங்கள், ஜெபம் செய்யுங்கள், தேவ வழிநடத்துதலோடு நற்கிரியைகளை நடப்பியுங்கள்.

ஜெபம்:

அழியாத நற்பொருளை எனக்குள் வைத்திருக்கும் தேவனே, இரு ளிலே பிரகாசிக்கின்ற ஒளியாக நான் எப்போதும் உமக்காக சுடர் விடும்படியாக உம் வார்த்தையை பற்றிக்கொணடிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 4:17