புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 14, 2022)

ஞானமுள்ளவர்கள் யார்?

சங்கீதம் 119:100

உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனா,யிருக்கிறேன்


நான் என் இளமைக் காலத்திலும், சரீரத்திலே பெலனுள்ள நாட்களிலும், என் கண்போன போக்கிலே வாழ்ந்து, என் மனமும் மாம்சமும் விரும்பினதை செய்து வந்தேன். ஆண்டுகள் கடந்து சென்ற பின்பு,இந்த உலகத்தின் போக்கையும், பந்த பாசங்களையும் பற்றியும் நான் கற்றுக் கொண்டேன். நான் அதற்கு கொடுத்த விலைக்கிரயம் அதிகம். என் பெலனுள்ள நாட்களை வீணிலே கழித்து விட்டேன் என்று ஒரு வயதான ஐயா, தன் பிள்ளைகளுக்கு ஞான முள்ள போதனையை கூறினார். அந்நாட்களிலே, அந்த ஐயாவின் வீட்டிற்கு அருகிலே, வாழ்ந்த வந்த வாலிபனொருவருன், தன் இளவய திலேயே, தன்னை சிருஷ;டித்த கர்த்தரிடம் தன் வாழ்வை ஒப்புக் கொடுத்திருந்தான். தான் ஈவாக பெற்றுக் கொண்ட பரிசுத்த ஆவி யானவரின் வழிநடத்துலுக்கு தன் வழிகளை ஒப்புக் கொடுத்து, தினமும் அவன் வேதத்தை தியானித்து ஜெபித்து வந்தான். அதனால், அந்த ஐயா, தன் முதிர்வயதிலே பெற் றுக் கொண்ட ஞானத்தைவிட, அதிக ஞானமுள்ளவனாக நடந்து கொண் டான். அது எப்படியாயிற்று? அந்த வாலிபனானவன், தன் வழிகளை கர்த்தருக்கு ஒப்புவித்ததால், கர்த்தர் அவனுடைய மனக் கண்களை பிர காசமாக்கினார். அதனால், அவன்: 1. எந்த வயதையுடையவர்களாக இரு ந்தாலும், தேவனுடைய வழிகளில் வாழ்பவர்களே ஞானமுள்ளவர்கள் என்று அறிந்து கொண்டான். 2. சகல பொல்லாத வழிகளின் முடிவை யும் தெளிவாக கண்டு, தன் கால்களை விலக்கிக் கொண்டான். 3. சூரிய னுக்கு கீழே மனிதர்களின் பிரயாசம் விருதா என்பதை இளவயதிலே கற் றுக் கொண்டான். 4. தேவனுக்கு பயந்து அவர் கற்பனைகளைக் கைகொ ள்ளுகின்றவனே முடிவுவரைக்கும் நிலைநிற்பான் என்று திட்டமாக அறி ந்து கொண்டான். பிரியமானவர்களே, இந்த உலக அறிவை தேடுகின்ற வர்கள் அதை கண்டு கொள்கின்றார்கள். அதனால் இந்த உலகிலே அவ ர்களுக்கு பல நன்மைகள் உண்டாகலாம் ஆனால் தேவ ஆவியானவ ருடைய வழிநடத்துதல் இல்லாமல் எவரும் ஆண்டவர் இயேசுவை அறி ந்து கொள்ள முடியாது. (1 கொரி 12:3). உலக ஞானத்தை பெற்றவ ர்கள் பூமிக்குரியவைகளை நாடித் தேடுவார்கள்;. பரத்திலிருந்து வரு கிற ஞானத்தை பெற்றவர்கள், தங்கள் வாழ்வை பரிசுத்தத்திற்கு ஒப்புக் கொடுகின்றார்கள். அவர்கள் சமாதானமும் சாந்தமும் நற்கனிகளாலும் நிறைந்த வாழ்க்கையையே நாடித் தேடுகின்றவர்களாயிருக்கின்றார்கள்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, இந்த உலகமும் அதன் போக்கும், அதன் முடிவும் மாயை என்பதை நான் உணர்ந்து, நித்தியமானவைகளை பற்றிக் கொள்ளும்படி தேவ ஞானத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக் 3:13-18