புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 13, 2022)

வேதத்தின் இரகசியங்களை அறிவதெப்படி?

சங்கீதம் 119:130

உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.


ஐயா போதகரே, படிப்பு என்பது சுத்தமாக எனக்கு பூச்சியம். யார் எப்ப டித்தான் போதித்தாலும் வேதப்படிப்பு என் மூளையிலே ஏறாது என்று ஒரு மனிதனானவன் தன் போதகரிடம் கூறினான். போதகரானவர் மறு மொழியாக: மகனே, வேதத்தின் மகத்துவங்களை அறிந்து கொள் ளும் படிக்கு, நல்ல ஆசிரியரிடம் உன்னை ஒப்புக்கொடு, அவர் நிச்சயமாக உனக்கு கற்றுக் கொடுப்பார் என் றார். அதற்கு அந்த மனிதனானவன்: அப்படியா போதகரே, அந்த ஆசிரி யர் எங்கே இருக்கின்றார் என்று கேட்டான். அந்த நல்ல ஆசிரியர் உனக்குள்ளே வாசம் பண்ணும் தேவ ஆவியானவரே. மகனே, நான் உனக்கு கூறுவது, ஒரு புராணக் கதை யல்ல. என்னைப் போன்ற பேதைகளை தமக்கென்று பிரித்தெடுத்து, பரலோக மகத்துவங்;களை வெளிப்படுத்தி, தம்முடைய ராஜ்யத்திற் குரியவைகளை போதிக்க எனக்கு ஞானத்தை தந்தார். எனக்கு மாத் திரமல்ல, தேவனுக்கு பிரியமாக வாழ்ந்த மனிதர்கள் யாவரும், தங்கள் கல்வி, அந்தஸ்துகள், உலக அறிவு யாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு, வெறுமையான பாத்திரமாக தம்மை ஆண்டவர் இயேசுவிடம் ஒப்புக் கொடு த்தார்கள். தேவ ஆவியானவர்தாமே அவர்களை சகல சத்தியத்திலும் வழிநடத்தி, தேவ சித்தத்தை அவர்கள் தமது வாழ்க்கையில் நிறைவே ற்றும்படி செய்தார். காலையிலே எழுந்து, வேதத்தின் ஒருபகுதியை வாசி, பின்பு தேவ ஆவியானவரை நோக்கி, எனக்கு கற்றுதாரும் என்று முழுமனதோடு உன்னை அவருடைய சமுகத்தில் தாழத்;தி ஒப்புக் கொடு. அப்போது நீ ஆச்சரியப்படும்படியாய் அவர் நீ அறியாத வழியிலே உன்னை நடத்தி, தேவனை அறிகின்ற அறிவிலே உன்னை பெருகப் பண்ணுவார் என்று கூறினார். ஆம், பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்கள் யாராக இருந்தாலும், எந்த வயதையுடையவராக இருந்தாலும், எத்தகைய கல்வியறிவுடையவராக இருந்தாலும் அல்லது கல்வியறிவற் றவர்களாக இருந்தாலும், ஆண்டவர் இயேசுவின் நாமத்திலே உங்களை தேவ ஆவியானவருக்கு ஒப்புக் கொடுங்கள். ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே இருந்த நாட்களிலே, பல கல்விமான்கள் இருந்தார்க ள் ஆனால் அவர்களோ தங்கள் மனக்கடினத்தினால் வேதத்தின் மகத்து வங்களை அறியமுடியாமல் போனார்கள். ஆனால் யாரெல்லாம் தங்களை இயேசுவிடம் ஒப்புக் கொடுத்தார்களோ, அவர்களுடைய மனக்கண்களை அவர் திறந்து, அவர்களை உணர்வுள்ளவராக்கினார்.

ஜெபம்:

பரலோக தேவனே, தேவ மகத்துவங்களை உலக ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, உம்மிடத்தில் தங்களை ஒப்புக் கொடுத்த பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 1:19-21