புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 12, 2022)

சமாதானம் நதியைப் போல வரும்

சங்கீதம் 63:1

தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்;


உடல் அலுப்பாக இருக்கின்றது, இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண் டும் போல அசதியாக இருக்கின்றது. ஆனாலும், நான் என் நேசருக்காக இருட்டோடே விழித்து, அதிகாலையிலே அவருடைய சமுகத்தில் காத் திருப்பேன் என்று தேவ சமுகத்தில் தரித்திருப்பதன் சுவையை அறிந்த ஒரு வயதான தேவ ஊழியர் கூறினார். சில மனிதர்கள் பல காரண ங்களுக்காக இருட்டோடே எழு ந்திருக்கின்றார்கள். வயலிலே சென்று சூரியன் உதயமாவத ற்கு முன் சில வேலைகளை முடி க்க வேண்டும், கல்வி கற்க வேண் டும், என்னுடைய வியாபார அலு வல்களை கவனிக்க வேண்டும் என்று பல காரணங்களுக்காக அதிகாலையிலே எழுந்திருக்கின்றார்கள். அவர்களில் சிலர் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் ஆனாலும் இன்னும் சிலரோ மனப்பூர்வமாக எழுந்திருக்கின்றார்கள். அந்த செயற்பாடானது, அவர்கள் தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதைக் குறித்த அவர்க ளது உறுதியான தீர்மானத்தையும், மனவாஞ்சையையும் காண்பிக்கி ன்றது. ஒவ்வொரு நாளும் நாம் விழித்தெழும் போது, அந்த நாளை ஆண்டவர் இயேசுவோடு உறவாடுவதிலே ஆரம்பிக்க வேண்டும். சிலரு க்கு காலையில் எழுந்திருப்பதென்பது இலகுவான காரியமல்ல. ஆனால், அவர்கள் வேலை செய்யும் இடத்திலே, அதிகாலையிலோ, மதியவேளை யிலோ, மாலையிலோ அல்லாமலும் இராச்சாமங்களிலோ சமுகமளி க்கும்படியாக பணிக்கப்பட்டால், அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அதற்கென மாற்றியமைத்து விடுவார்கள். பிரியமானவர் களே, நீங்கள் அதிகாலையிலே ஆண்டவர் இயேசுவை தேடுபவர்களாக இருந்தால், அதை ஒருபோதும் விட்டுவிடாதிருங்கள். ஆனால், இன்று நீங்கள் காலையிலே ஆண்டவர் இயேசுவின் சமுகத்தில் தரித்திருக்காவிட்டால், நீங்கள் எழுந்திருக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக எழுந்திருந்து, வேதத்தின் ஒரு பகுதியை வாசித்து, தியானித்து, ஜெபம் செய்யுங்கள். மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித்தப் பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போல உங்கள் வாழ்க்கையிலே சமாதானம் பெருகிவரும். நெருக்கப்படுகின்ற நாளிலும், ஆபத்து சூழந்து வரும் வேளையிலும், பதற்றமடையாமல், மிகவும் சுவையா னதும், முழுமையான திருப்தியை தரும் ஆகாரத்தை உண்பது போல, உங்கள் ஆத்துமா ஆண்டவர் இயேசுவின் சமுகத்திலே திருப்தியாகும்;. நாம் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் நம் தேவனை போற்றுவோமாக.

ஜெபம்:

காலைதோறும் புது கிருபை தரும் தேவனே, அதிகாலையிலே உம்முடைய திருச்சமுகத்தில் தரித்திருக்கும் மேன்மையை உணர்ந்து கொள்ளும் இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:147