புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 11, 2022)

வேதத்தின் மகத்துவங்கள்

சங்கீதம் 119:72

அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.


இந்த உலகிலே வாழ்ந்த பிரல்யமான கவிஞர்கள் பல கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதி வைத்திருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் மனதிலே தோன்றும் யோசனைகளின்படி (கற்பனை உலகம்), தங்களு க்குண்டாயிருக்கும் மொழியின் அறிவின்படியும் அவைகளை எழுதி வைத்தார்கள். ஆனால், கர்த்தருடைய வேதமானது, அப்படியாக மனிதர் களுடைய சுய எண்ணப்படி எழுதப்பட்டவைகள் அல்ல. வேதவாக்கிய ங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. இது மனுஷ சித்தத்தினாலே உண்டானவைகள் அல்லவே (2 தீமோ 3:16, 2 பேதுரு 1:21-22). நித்திய வாழ்வைக் கொடு க்கும் வசனங்களின் மகத்துவங் களைப் பற்றி, அவைகளை தங் கள் வாழ்க்கையில் அனுபவித்த, தேவ பக்தர்கள் வேதத்தை குறித்து கூறிய சில காரியங்களை நாம் பார்ப்போம். என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக் கொள்ளாதபடிக்கு, கர்த்தருடைய வசனம் என்னை உயிர்ப்பிக்கி ன்றது. சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகின்ற போது, வேத வசனமானது என்னை மறுபடியும் எடுத்து நிறுத்துகின்றது. பொய்வ ழியை என்னைவிட்டு விலக்கி, மெய் வழியை நான் தெரிந்து கொள்ளு ம்படி என் கண்களை தெளிவாக்குகின்றது. நான் அஞ்சுகின்ற நிந்தையி லிருந்தும், உலகத்தின் மாயையி லிருந்தும் என்னைக் காத்து, என் இருதயம் பொருளாசையைச் சாராமல் மேன்மையானவைகளை பற்றிக் கொள்ள வழிகாட்டுகின்றது. வேதத்தின் தியானமானது இந்த உலகத்தி னால் கொடுக்க முடியாத தெய்வீக ஞான த்தை கொடுத்து, கல்விமா ன்களால் அறியக்கூடாதாவைகளை கற்றுக் கொடுக்கின்றது. கர்த்தரு டைய வேதம் பிள்ளைகளுடைய வழிகளை சுத்தம் பண்ணுகின்றது. என் துக்கத்தின் நாளிலே, உம்முடைய வேதம் என் மனமகிழ்சியாக இருக் கின்றது. அவருடைய வசனங்களினாலே அவர் என்னை உயிர்ப்பிக்கி ன்றார். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதை க்கு வெளிச்சமுமாயிருக்கிறது. உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவ ர்களாக்கும். இக்கட்;டு நேரத்தில் மனமகிழ்ச்சியை கொடுக்கின்றது. முடிவிலே நம்மை நித்திய ஜீவனிலே சேர்க்கின்றது. ஆதலால், பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் வேதத்தில் பிரியமுள்ளவர்களாகி, அதையே தங்கள் வேத த்தை பொக்கிஷமாகிக் கொண்டார்கள். (சங் 119: 9, 25, 28-30, 36-39, 50, 54, 80-82, 92-95, 99, 100, 105, 130, யோவான் 6:68)

ஜெபம்:

உத்தம மார்க்கத்தாராக வாழும்படி என்னை வேறு பிரித்து உம்மு டைய மேன்மையான வேதத்தை எனக்கு தந்தவரேஇ, நான் அதைப் பற்றிக் கொண்டு மெய்வாழ்வை கண்டடைய என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:7-8