புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 10, 2022)

திரளான செல்வத்தில் களி கூருவதுபோல

சங்கீதம் 119:14

திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.


ஒரு ஊரிலே மிகுந்த ஆஸ்தியுடைய செல்வந்தனொருவன் இருந்தான். அவனுக்குண்டான ஐசுவரியத்தினாலே, அவன் அந்த ஊரிலும், அதன் சுற்றுப்புற வட்டாரங்களிலும் பெயரும் புகழுமுடையவனாகவும், பிரபுக் கள், அதிகாரிகள் மத்தியிலே பெரும் செல்வாக்குடையவானகவும் இரு ந்தான். தானும் தன் குடும்பமும் ஆசைபட்டதெல்லாம் பெற்றுக் கொள் வது அவனுக்கு இலேசான காரியமாக தோன்றிற்று. தன் செல்வத்தி னால் தான் சம்பாதிக்க முடியாத காரி யம் ஒன்றுமில்லை என்ற மனநிலை யுடன், தனக்கிருந்த திராளான செல் வத்திலே அவனும் அவனுடைய குடு ம்பத்தினரும் களிகூர்ந்து வந்தார்கள். சில ஆண்டுகள் கடந்து சென்ற பின் போ, அவன் குடும்பத்திலே ஏற்பட்ட சிறிய குழப்பமொன்றினால், அவர் கள் தங்கள் நிம்மதியை இழந்து போனார்கள். ஆனாலும் அவர்களுக்கி ருந்த திரளான செல்வத்தினால், அவர்களுக்கு ஏற்படடிருக்கும் குறை வை நிவிர்த்தி செய்ய முடியாமற்போயிற்று. ஒரு மனிதனுடைய வாழ் விலே மனதிருப்தியானது, இந்த உலக ஐசுவரியத்தினால் உண்டாகுவ தில்லை என்பதை உணர்ந்து கொண்ட போதும், பலர் முன்னிலையிலே, தாங்கள் விலையுயர்ந்த காட்சிப் பொருளைப் போலவே நடமாடி வந் தார்கள். ஆம் பிரியமானவர்களே, அநித்தியமான இந்த பூமிலுள்ள மனி தர்களாலே வகுக்கப்பட்ட எல்லைகளை, அழிந்து போகும் இந்தப் பூமி க்குரிய செல்வத்தினாலே மாற்றிப்போட முடியும். ஆனால், நித்தியமான பரலோகத்தினாலே மனிதர்ளுக்கு போடப்பட்ட எல்லைகளை, அழிந்து போகும் பூமிக்குரிய செல்வத்தினாலே மாற்ற முடியாது. அழிவுள்ளவை களாலே, அழியாமையை நாம் அடைந்து கொள்ள முடியாது. அதாவது, நமக்கு முன்னோடிகளாக இருந்த தேவனுடைய பக்தர்கள், உலகத்தின் திரளான செல்வத்தினாலே சம்பாதிக்க முடியாத மனச் சமாதானத்தை கண்டடைந்தார்கள். பாவ மன்னிப்பின் நிச்சயம் அவர்கள் உள்ளத்திலே நிலைத்திருந்தது. மாம்ச கண்களால் காண முடியாத, பரலோகத்தை அவ ர்கள் காணும்படியாக அவர்களின் விசுவாசக் கண்கள் அவர்களுக்கு திறக்கப்பட்டது. இவைகளை அந்த தேவ பக்தர்கள் எதனால் பெற்றுக் கொண்டார்கள் வேதத்திலுள்ள தேவ வார்த்தைகளினாலேயே சம்பாதி த்துக் கொண்டார்கள். அதனாலேயே அவர்கள் திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, தேவனுடைய வார்தைகளிள் வழியிலே களிகூர்ந் தார்கள். மனத்திருப்தியை பெற்றுக் கொண்டார்கள். இதுவே தேவ பிள் ளைகளாகிய நமக்கு உண்டாயிருக்கும் மேன்மை.

ஜெபம்:

அழியாத நித்திய வாழ்வை கொடுக்கும் வார்த்தைகளை எனக்கு பேதிக்கும் தேவனே, வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 24:35