புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 09, 2022)

நம் வாழ்வின் ஆதாரம்

சங்கீதம் 145:19

அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுத லைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.


ஒவ்வொரு நாளும், தவறாமல் அதிகாலையிலே எழுந்து, கர்த்தருடைய சமுத்திலே தரித்திருந்து, வேதத்தை வாசித்து, தியானித்து, கர்த்தரோடு ஜெபித்து உறவாடுவது, தகப்பனானவரொருவரின் உள்ளத்தின் வாஞ் சையாக இருந்தது. ஒரு நாள் சனிக்கிழமை காலையிலே, அந்தத் தக ப்பனானவர், தன் மகனை அழைத்து, மகனே, நீ இன்று உன் நண்ப ர்களோடு விளையாடப் போகவேண்டாம் என்று அவனை தடுத்து நிறு த்தினார். அதற்கு அவன் தயவாக: அப்பா, நான் காலை எழுந்து வேத த்தை வாசித்தேன், ஜெபித்தேன், என்னுடைய கடமைகளை எல்லாம் தவறாமல் செய்து முடித்துவிட்டேனே, அப்படியானால் ஏன் என்னை தடுத்து நிறுத்துகின்றீர்கள் என்று தயவாக கேட்டுக் கொண்டான். தகப்பனான வர் மறுமொழியாக: மகனே, நீ செய்ய வேண்டியவைகளையெல்லாம் செய்து முடித்தது உண்மை ஆனாலும் இன்று நீ அங்கே போகக்கூடாது என்று திட்டமாகவே கூறிவிட்டார். அது மட்டுமல்லாமல், அயலிலே வசிக் கும் மற்றய மனிதர்களிடமும், இன்று மைதானத்திற்கு சென்று விளையாட பிள்ளைகளை அனுமதிக்க வேண்டாம் என்று தயவாகக் கேட்டுக் கொண் டார். அன்றைய நாளிலே, மத்தியான வேளையிலே, அந்த ஊரிலே பெரிதான குழப்பமும் உயிரிழப்பும் ஏற்படக்கூடியதாக வன்முறைகள் நடைபெற்றது. அந்த வாலிபனானவன், அன்று விளையாடச் சென்றிரு ந்தால், அவன் உயிருக்குக்கும்கூட ஆபத்து ஏற்பட்டிக்கும். பிரியமான வர்களே, வேதத்தை தியானித்து, ஜெபித்து கர்த்தரோடு உறவாடுவ தென்பது, ஒரு சடங்காச்சாரம் அல்ல. நாம் கர்த்தரோடு உறவாடும் போது, அவர் நம் மோடு இடைப்பட்டு வாழ்வின் காரியங்ளைக் குறித்து பல வழிகளிலே நம்மோடு பேசுகின்றவராக இருக்கின்றார். இது அவரு டைய வாக் குத்தத்தம். அந்த வாலிபனைப் போல நாம், சீக்கிரமாக ஜெபத்தை செய்துவிட்டு போய்விடுகின்றவர்களாக இருக்காமல், கர்த் தர் நம்மோடு இடைப்படும்படி விசுவாசத்தோடு அவர் சமுகத்திலே தரித் திருக்க வேண்டும். கர்த்தரானவர், அந்த சனிக்கிழமையன்று, அந்த தக ப்பனானவரின் மனதிலே வரவிருக்கும் பொல்லாப்பை உணர்த்தியது போல, இன்னும் பல வழிகளிலே நம்மை நடத்திச் செல்கின்றவராயிரு க்கிறார். எனவே, கர்த்தரோடு உறவாடும்படிக்கு, அவரை உண்மையு ள்ள மனதோடு கூப்பிடுங்கள். அவர் சமுகத்தை நித்தமும் வாஞ்சை யோடு தேடுங்கள்.

ஜெபம்:

உண்மையாய்த் உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், சமீபமாக இருக்கும் கர்த்தாவே, அனுதினமும் உம்மோடு வாழும் வாழ்க்கையின் பாக்கியத்தை உணர்ந்து கொள்ளும் இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 16:13-15