புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 08, 2022)

கருத்துள்ள ஜீவியம்

சங்கீதம் 42:2

என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது.


ஒரு வாலிபனானவன், சனிக்கிழமை காலையிலே எழுந்ததும், வேத த்தை வாசித்து, சிறிறு நேரம் ஜெபம் செய்த பின்னர், தன் பெற்றோர் தனக்கு கொடுத்த வேலைகள் யாவையும் துரிதமாக செய்து முடித்து, காலை ஆகாரத்தை அவசரவசரமாக உண்டுவிட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள மைதானத்திலே, தன் நண்பர்களோடு கிரிக்கெற் விளையாடும்படி சீக்கிரமாகய் புறப்பட்டுச் சென்று விடுவான். பிரதி சனிகிழமைதோறும், இது அவனுடைய வழக்கமாக இருந் தது. அவனுடைய தகப்பனானவரோ, அதிகாலமே விழிந்தெழுந்து, தேவனுடைய பாதத்திலே, தரித்திருந்து, வேத வசனத்தை தியானித்து, ஜெபிப்பது அவருடைய மனவாஞ்சையாக இரு ந்தது. அந்த வாலிபனானவன், காலை எழுந்ததும் ஏன் சீக்கிரமாக தன் கடமைகளை செய்து முடித்தான்? அவனுடைய ஆசை எதைப் பற்றியிருந்தது? எப்படியாவது, அந்த மைதானத்திற்கு சென்று நண்பர்களோடு அதிக நேரம் கிரிகெற் விளையாட வேண்டும் என்பதே அவனுடைய மனதின் வாஞ்சையாக இருந்தது. அந்த வாலிபனானவன் வளர்ந்து தேவனுக்கு பிரியமுள்ள பிள்ளையாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், பெற்றோர்கள் சிறிய வயதிலே ஒழுக்கத்தை கற்று கொடுத்து வந்தார்கள். அது மிகவும் அவசியமான தும் நன்மையானதுமாக இருக் கின்றது (நீதிமொழிகள் 22:6). நாம் ஒப்பனையாக பேசவோமென்றால், அந்த வாலிபனானவன் எப்படியாக கிரிகெற் விளையாட வேண்டும் என்று வாஞ்சையுடையவனாக இருந்தானோ, தேவனோடு நாம் கொண் டுள்ள உறவும் அத்தகையதாக இருக்க வேண்டும். கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கையில், தேவனோடு நாம் கொண்டுள்ள உறவானது வெறும் கடமையுணர்வு மட்டுமல்ல. நம்முடைய வாழ்க்கையிலே வேதத்தை தியானிப்பதும், ஜெபம் செய் வதும் நாளாந்த வேலைகளில் ஒன்றாக நாம் கருதி வாழக் கூடாது. தேவனோடு நாம் கொண்டுள்ள உறவில் தெய்வீக அன்பின் பிணைப்பு எந்த வேளையிலுமே காணப்பட வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் வேதமும், ஜெபமும் ஒரு பகுதியல்ல, நம் வாழ்க்கை முழுவதும், தேவ வசனத்திற்குள்ளும், ஜெபத்திற் குள்ளும் அடங்கி இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கருதுள்ள ஜீவியம், இந்தப் பூவுலகின் வாழ்விலே வெற்றியையும், மறுமையின் வாழ்விலே நித்திய வாழ்வையும் கொடுக்கும். அடுத்த சில நாட்களுக்கு, கருத்துள்ள ஜீவியத்தை குறித்து நாம் தியானம் செய்வோம்.

ஜெபம்:

உன் செய்கைகளை என்னிடத்தில் ஒப்புவி என்று கூறிய தேவனே, என் வழிகள் உம்மில் உறுதிப்படும்படிக்கு, வாஞ்சையுள்ள இருதயத்தோடு, நான் உம்மைக் கிட்டிச் சேர என்னை உம்மிடமா ய் இழுத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:5-9