புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 07, 2022)

நற்பலனை காத்துக் கொள்வோம்

மாற்கு 4:18

உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்ற வைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசி த்து, வசனத்தை நெருக்கிப் போடதினால் பலனற்றுப் போ கிறார்கள்;


இன்றைய உலகிலே கிடைக்கும் தகவல்கள் சமுத்திரத்தைப் போல பரந்ததும், எங்கும் மலிந்துமாய் இருக்கின்றது. அவைகள், பலவிதமான ஸ்தாபனங்களால், பற்பல வடிவங்களிலே தொகுத்து வழங்கப்பட்டு வரு கின்றது. பொருளாதார அறிவுரைகள், அரசியல் கண்ணோட்டங்கள், மத நம்பிக்கைகள், உலகச் செய்திகள், நாட்டு நடப்புக்கள், விளையாட்டுக ளும் அதன் செய்திகளும், சரித்திர ஆராய்ச்சிகள், மருத்துவ துணுக்குகள், இயற்கையின் அதிசயங்கள், சுற்றுலாப் பயணங்கள், உணவுவகை கள், பொருட்கள் கொள்வனவு (Shopping), சினிமா மற்றும் களியாட்ட ங்கள் (Entertainment shows) போன்றவைகளும் இவற்றுள் உள்ளடங்கும். இன்று மனிதர்களில் பலர், இவை பாதகமற்ற பொழுதுபோக்குகள் என்று கூறிக்கொண்டு, மேற்குறிப் பிட்ட காரியங்களில் சிலவற்றை தங்கள் வாழ்வின் முக்கிய பகுதி யாக தெரி ந்து கொள்கின்றார்கள். மனப்பூர்வ மாக அதிக நேரங்களையும், பணத்தையும் அவைகளிலே செலவு செய் கின்றார்கள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையை குறித்த தீர்மானங்கள், அவரவருக்குரியதும் தனிப்பட்ட துமாக இருக் கின்றது. பரலோக யாத்திரிகளாக இந்த உலகத்தை கடந்து கொண்டி ருக்கும் நாம், வரையறையின்றி உலகம் போகும் போக்கில் வாழக் கூடாது (ரோமர் 12:1-2, 1 யோவான் 2:15-17). எனவே நாம் தகவல்களை உள் வாங்க தீர்மானம் எடுக்க முன்பதாக, சில கேள்விகளை நம்மிடத்தில் கேட்டுக் கொள்ள வேண்டும். அவைகளுக்கு என் வாழ்வில் எல்லை எது? அவைகளை தொகுத்து நமக்கு வழங்குகின்றவர்கள் யார்? அவர்கள் தேவனுக்கு பயந்தவர்களா அல்லது இந்த உலகத்தின் போக்கில் வாழ் பவர்களா? அவைகளை நமக்கு தொகுத்து தருபவர்களின் நோக்கம் என்ன? அவற்றைப் பற்றிக் கொள்ளும் நம்முடைய நோக்கம் என்ன? அதனால் நம் வாழ்விலுண்டாகும் பலன் என்ன? என்பதைப் குறித்து நாம் வேத வார்த்தையின் வெளிச்சத்திலே சோதித்தறிந்து, நம் இருத யத்திலே விதைக்கப்பட்டிருக்கும் தேவ வார்த்தையானது, அவற்றால் நெருக்கப்பட்டு பலனற்றுப் போகாதபடிக்கு, நம்முடைய இருதயமாகிய நல்ல நிலத்தின் எல்லையை நாம் காத்துக் கொள்ள வேண்டும். தேவனை அறிகின்ற அறிவிலே வளர்ந்து பெருகுங்கள்.

ஜெபம்:

பரம அழைப்பின் பந்தையப் பொருளுக்காக என்னை அழைத்த தேவனேஇ அந்த இலக்கையே என் வாழ்வின் நோக்கமாக கொண்டிருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:15-17