புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 06, 2022)

நம்பத்தகுந்த தகவல்கள் எவை?

லூக்கா 21:33

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.


நாங்கள் வாழ்வதற்கு வளமான பிரதேசம் எது? எவ்விடத்திலே வேலை வாய்ப்புக்கள் அதிகம் உண்டு? எங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கும் எதிர்காலத்திற்கும் உகந்த பாடசாலை எது? என்று பல கேள்விகளோடு வாழும் மனிதர்கள், பலவிதமான தகவல்களை (information) திரட்டிக் கொள்கின்றார்கள். குடிசையிலே வாழும் ஏழையாக இருந்தாலும், மாளிகைகளிலே வாழும் பிரபுக் களாக இருந்தாலும் தங்கள் தேவை களையும் ஆசைகளையும் நிறை வேற்றும்படி தகவல்களை தேடுகி ன்றார்கள். நாம் வாழும் இந்த யுகம் தகவல்களால் நிறைந்திருக்கின்றது. இந்த உலகத்திலே நாம் பெற்றுக் கொள்ளும் தகவல்கள் நம்பத்;தகுந்ததா? அவைகள் தரமானதா? ஆவை களில் உண்மை உண்டா? இந்த உலகத்தின் அளவுகோலின்படியும், அதன் சுட்டிகளின்படியும் அவைகளில்; உண்மையும் தராதரமும் உண்டு. அவைகள் மனிதர்களுடைய அறிவை மையமாக கொண்டவைகளும், தற்போது மனிதர்களிடம் இருக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண் டவைகளுமாகவே இருக்கின்றது. ஆபிரகாம், லோத்து என்னும் இரண்டு மனிதர்களும் தேவனுக்கு பயப்படுகின்றவர்களும், நீதிமான்களுமாக இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் ஆஸ்திகளும் மிகுதியாகயிரு ந் தபடியால், அவர்கள் ஒரே இடத்திலே குடியிருப்பதற்கு ஏதுவில்லாமற் போயிற்று. லோத்து, யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டு, யோர்தானுக்கு அருகான சமபூ மியிலுள்ள பட்டணங்களில் வாசம் பண்ணி, சோதோம் என்னும் பட்ட ணத்திற்கு நேரே கூடாரம் போட்டுக் கொண்டான். அந்தக் குடி யிருப்பு உண்மையிலேயே செழுமை நிறைந்ததும், நகாரீகமுடையதுமாக இருந் தது. ஆனால், சோதோம் பட்டணமானது வானத்திலிருந்து வரும் கந்தக த்தாலும் அக்கினியினாலும்; முற்றாக அழிக்கப்படும் என்பதை தேவன் ஒருவரே அறிந்திருந்தான்;. ஆபிரகாமோ தேவனுடைய வாக்குத்ததமா னது நிறைவேறும்படி தேவனையே சார்ந்திருந்தார். பிரியமானவர்களே, நாம் காணும் வானங்களும் பூமியும் அந்த தேவ வார்த்தையின்படியே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கின்றது. (2 பேதுரு 3:7) எனவே உங்களுடைய வாழ்விலே, தேவ சித்தம் என்ன என்பதை அறிந்து கொள் ளும்படி தேவ ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு இடங் கொடுங்கள். நீங்கள் எங்கு செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே உங்களுக்கு உறுதிப்படுத்துவார். ஆபிரகாமுக்குண்டான ஆசீர்வாதத்தில் நம்மையும் பங்கடையச் செய்வார்.

ஜெபம்:

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் என்று கூறிய தேவனே, நான் உம்முடைய சித்தத்திற்கு விரோதமான தீர்மானங்களை எடுக்காதபடி என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:7-11