புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 04, 2022)

மனக்கண்களை தெளிவாக்கும் வேதம்

சங்கீதம் 119:34

எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.


ஒரு ஊரிலே வசித்த வந்த வியாபாரினானவன், தன் வியாபார அலுவ லாக, இரண்டு நாட்களுக்கு, அடுத்த ஊரொன்று சென்றுவர வேண்டிய தேவை ஏற்பட்டது. அவன் தன் இரண்டு பிள்ளைகளையும் நோக்கி: அப்பா இரண்டு நாட்களுக்கு வீட்டிலே இருக்க மாட்டேன் எனவே நீங் கள் அம்மாவின் சொற்படி நடந்து கொள்ளுங்கள். மழைக்காலமாக இருப்பதால், இரவில் இடியும் மின்னலும் இருக்கும் எனவே, ஜன்னலை திறந்து வெளிய பார்க்காமல், இரு ட்டுவதற்கு முன், ஜன்னல்களை அடைத்துவிட்டு, உள்ளே இருங்கள் என்று கூறி தன் பயணத்தை ஆரம் பித்தார். தகப்பனானவர் சென்ற பின்பு, சிறுவர்கள் இருவரும் இன் ரநெற்றை (இணையத் தளம்) திற ந்து, இடி, மின்னல், புயலைக் குறி த்து ஆராய்ச்சி செய்து, அதனால் உண்டாகும் பெரும் பாதிப்புகளைக் குறித்த அநேக காரியங்களால் தங்கள் மனதை நிரப்பிப் கொண்டார்கள். பொழுது சாய்ந்ததும், தகப்பனானவர் கூறியதைப் போல, இரவிலே இடியும் மின்னலுமாக இருந்தது. அவர்கள் சற்று நேரம் கழித்து, இணை யத் தளத்திலிருந்து தங்கள் தலைக்குள் இறக்கம் செய்த தகவல்களை உறுதிப்படுத்தும்பக்கு, ஒருமுறை ஜன்னலை திறந்து பார்ப்போம் என்று கூறி ஜன்னலை திறந்தார்கள். இடியும் மின்னலும் பயங்கரமாக இரு ந்தது. இதனிமித்தம் அன்றிரவு, அவர்கள் தூங்க முடியாதபடிக்கு பய மும் திகிலும் அவர்கள் மனதை பற்றிக் கொண்டது. பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய பரம தந்தையாகிய தேவனானவர், நமக்கு கொடுத்திருக்கும் அருமையான வாழ்வு தரும் வார்த்தைகளடங்கிய வேதத்தை நாம் ஆராய்ச்சி செய்து, அவைகளினாலே நம் மனதை நிரப்பிக் கொள்ள வேண்டும். இந்த உலகத்திலே நடக்கும் காரியங் களை அறிந்து கொள்வதிலும், கற்றுத் தேறுவதிலும் தவறில்லை என்பது பொவான அபிப்பிராயம். ஆனால் அதை எவ்வளவாக அறிந்து கொள்ளப் போகின்றீர்கள் என்று நீங்கள் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தின் செய்திகளினால் ஆத்துமா சஞ்சலத்தால் கரைந்து போகும். ஆனால் தேவனடைய வசனமோ இந்த உலகத்தின் வேஷத்தையம், மாயையும் நாம் காணும்படிக்கு நம் மனக் கண்களை தெளிவாக்கி, நித்தியமானவைகளை பற்றிக் கொள்ளும்படிக்கு நம் ஆத் துமாவை உயிர்ப்பிக்கும். எனவே, வேதத்தை ஆராய்ந்து அதன் அதிச யங்களால் மனதை நிரப்பிக்கொள்ளுங்கள்.

ஜெபம்:

வாழ்வின் விளக்காக வேதத்தை எனக்குத் தந்த தேவனே, நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்ந்து, அதன் வழயிலே என் சிந்தையை காத்துக் கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8