புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 03, 2022)

'செய்திகள்'

மத்தேயு 24:6

கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்.


யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்;. நீங் கள் கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோத மாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங் களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண் டாகும். இவைகளெல்லாம் வேதனைக ளுக்கு ஆரம்பம் என்று ஆண்டவராகிய இயேசு இவைகள் சம்பவிப்பதற்கு முன் னதாகவே இவைகளை குறித்து கூறியி ருக்கின்றார். பொல்லாப்புக்க ளையும், அழிவுகளையும், பயங்கரமுமான செய்திகளைக் கேட்கும் போது எப்படி ஒரு மனிதனானவன் மனம் கலங்காமல் இருக்க முடியும்? மேலே ஆண்டவர் இயேசு கூறிய முன்னறிவிப்பின் செய்தியிலே, நம்முடைய கண்களும், மனதும் எதற்கு அதிக கவனத்தை கொடுக்கின்றது என்பதைக் குறித்து ஆராய்ந்து பார்ப்போம். 1. கர்த்தராகிய இயேசு மறுபடியும் வரும் நாட்கள் நெருங்கும் போது, தேசங்களும் அதன் குடிகளும் ஒன்று க்கொன்று விரோமாக எழும்பும். யுத்தங்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், பூமியதிர்சிகள் பல இடங்களிலே உண்; டாகும். இது முன்னறிவிப்பின் ஒரு பகுதி. 2. நீங்கள் கலங்காதபடி எச்சரிக்கையாக இருங் கள். இவைகள் யாவும் நிறைவேற வேண் டும் என்பது செய்தியின் இன்னுமொரு பகுதி. இவை இரண்டிலும் நாம் எதை அதிகமாகப் பற்றிக் கொள்ள வேண்டும்? ஆம், பொல்லாப்புக்களையும், பயங்கரங்களையும் கண்டு கலங்காதபடிக்கு நாம் எச்சரிக்கையுள்ளவர்களாக வாழ வேண்டும். அதுவே, தேவ முன்னறிவிப்பின் கருப்பொருளாக இருக்கின்றது. அதிலேயே நாம் நம் கண்களையும் மன தையும் பதிய வைக்க வேண்டும். அதாவது, பயங்கரமான உலக செய் திகளால் நம் மனதை நிரப்பிக் கொள்ளாமல், ஆண்டவராகிய இயேசு மறுபடியும் வந்து நம்மை சேர்த்தக் கொள்ளும் வரைக்கும் அவர் கொடு த்திருக்கும் வாக்குத்தத்தங்களை உறுதியாக பற்றிக் கொண்டிருக்க வேண் டும். அவைகளில் சில: நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன் (யோவான் 14:18). உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடு இருக்கின்றேன் (மத்தேயு 28:16). நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் (யோவான் 14:18). எனவே துர்செய்திகளை கேட்டு பயப்படாமல், தேவ செய்தியை கேட்டு பெலனடையுங்கள். நித்தியஜீவனை அளிப்பேன் என்று அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள் (1 யோவான் 2:25).

ஜெபம்:

தியைகாதே கலங்காதே நான் உன்னோடுகூட இருக்கின்றேன் என்று வாக்குரைத்த தேவனே, உலகிலே நடப்பவைகளை கண்டு மருண்டுபோகாமல், விழிப்புடன் தரித்த்ருக்க பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்

மாலைத் தியானம் - எபிரெயர் 13:5