புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 02, 2022)

நம்மோடிருப்பவர் பெரியவர்

சங்கீதம் 46:10

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்;


'பொறுமையாக இருந்த நாட்கள் போதும், இனி நான் யார் என்று காட்டுகின்றேன்' என்று;, தன் வாயினாலே சிலர் முன்னிலையிலே ஒரு மனிதனானவன அறிக்கையிட்டத்தை, கேட்டுக் கொண்டிருந்த ஒரு வயது முதிர்ந்த போதகர், அன்று மாலையிலே அவனுடைய வீட்டி ற்கு சென்று அந்த மனிதனோடு பேசிக் கொண்டிருந்தார். மகனே, இன்று காலையிலே நீ அறிக்கை யிட்ட வார்த்தையை, நான் எப் படியாக விளங்கிக் கொண்டேன் என்பதை உனக்கு கூறும்படிக்கே இங்கே வந்திருக்கின்றேன். அதா வது, தேவனுடைய நாமத்தினிமித்தம் நான் பொறுமையாக இருந்த நாட்கள் போதும், சூழ இருக்கின்ற சில மனிதர்களுடைய தொந்தரவுக்கு எல்லை இல்லை, எனவே, நான் உண்மையிலே யார் என்பதை இனி த்தான் காட்டப் போகின்றேன். என்னுடைய பழைய வாழ்க்கையின் விஸ் பரூபத்தை சிலர் காணப் போகின்றார்கள். விதைத்த நல்ல விதை கள் வளர்ந்து பலன் கொடுக்கும் நாட்கள் வருமுன், இரவிலே வரும் சில வனவிலங்குகளின் தொல்லைகளினால், தன் தோட்டத்தை தானே கெடு த்துப் போட்ட தோட்டக்காரனைப் போல இருக்காதே என்று கூறி, தன் வழியே போய்விட்டார். அன்று இராத்திரியிலே, இந்த வார்த்தை கள் அந்த மனிதனானவனுடைய மனதிலே கிரியை செய்ய ஆரம்பித் தது. தன் பெலவீனத்திலே வீணான வார்த்தைகளை அறிக்கையிட்டேன் என்று அவன் மனம் வருந்தி தேவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். அது மட்டுமல்ல, தான் அந்த வார்த்தைகளை அறிக்கையிட்ட போது, அதை கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்கள், சிறியவர்கள் யாவரிடமும் சென்று, நான் என் கோபத்திலே அறிக்கையிட்ட வார்த்தைகள் மிகவும் தவறானது. அவைகளுக்காக நான் மனம்வருந்துகின்றேன் என்று பலர் முன்னி லையிலே நல்ல அறிக்கை செய்தான். பிரியமானவர்களே, நாம் நம் வாழ்விலே ஜீவ வழியைவிட்டு தவற வேண்டும் என்பதே எதிராளி யாகிய பிசாசானவனின் நோக்கமாயிருக்கின்றது. அவனுடைய தந்திர ங்களுக்கு இடங் கொடுக்கும் மனிதர்கள் வழியாக, அவன் நம்மை தொந்தரவு செய்து கொண்டிருப்பான். அந்த வஞ்சகமான வலைக்குள் நாம் விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண் டும். எங்களுடைய போராயுதங்கள் மாம்ச பெலன் அல்ல. உலகத்திலி ருக்கிற வனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவராலே நாம் உல கத்தை ஜெயங் கொள்ளுகின்றவர்களாக இருக்கின்றோம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்மை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும், தர்க்கங்களையும், எண்ணங்களையும் ஜெயங்கொள்ள பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:4

Category Tags: