புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 01, 2022)

பயப்படாதே, கலங்காதே

ஏசாயா 43:2

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை;


சுற்றுலா பயணம் போல ஆரம்பித்த கடல் பயணமானது மகிவும் நீண்டதும் பரபரபற்றதுமானதாகவும் தோன்றிற்று. அமைதியான அமர் ந்த தண்ணீரிலே, மெல்லிய தென்றல் வீசும் போது, பதற்றமேதுமின்றி படகு அக்கரையை நோக்கி செல்லும் என்றிருந்த போதோ, நடுக் கட லிலே, கார்மேகங்கள் வானத்தை மூடிற்று, இருளும் சூழ்ந்து கொண் டது, கடும் புயலிலும் பெருங் காற் றிலும் படகு அகப்பட்டது. இக்கட்டும் நெருக்கமும் சூழ்ந்து கொண்டது. அக்கரைக்கு செல்வோம் என்ற நிச் சயம் அற்றுப் போகத்தக்கதாக சூழ் நிலைகள் சாதகமற்றதாயிற்று. இப்படியாக நம் வாழ்க்கைப் படகும் நடுச் சமுத்திரத்திலே மூழ்கி, வலிய தண்ணீரிலே நாம் மடிந்து போய் விடுவோம் என்ற திகில் மனதை ஆட்கொள்ளும் போது, மதியற்ற மனு ஷனே, சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதை யையும் உண்டாக்கின்ற ஆண்டவராகிய இயேசு உன் வாழ்க்கை படகை ஓட்டிச் செல்கின்றார் என்பதை மறந்தாயோ? என்ற சத்தம் காதுகளில் ஒலிக்கும். எனவே, மாம்சத்தின் கண்களால், வாழ்க்கை சுற்றி சூழ்ந்திரு க்கும் பயங்கரங்களை நோக்கிப் பார்க்காமல், மனக் கண்களாலே, நான் உங்களை திக்கற்றவராக விடேன் என்று சொன்ன மீட்பர் இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் அக்கரைக்கு போவோம் என்று சொன் னால், அதை யார் தடுத்து நிறுத்த முடியும்? சமுத்திரத்தையும், ஆழி யையும் படைத்தவர் நம்மோ டிருந்தார் கலக்கம் எதற்கு? இருள் சீக்கிரத்தில்; அகன்று போகும், அதிகாலை விடிவெள்ளி உங்கள் வாழ் வில் உதிக்கும். அதுவரைக்கும் சோர்ந்து போகாமலும், நெகிழ்ந்த கைக ளையும் தளர்ந்த முழங்கால் களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தும் படிக்கு, உங்கள் பாதைகளை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து, அவர் உங்களுக்கு கொடுத்த வாக்குத்த்தங்களை உறுதியாய் அறிக்கையிடு ங்கள். இந்த யாத்திரையிலே, நீங்கள் தனியே விடப்படவில்லை என்ப தையும், மீட்கப்பட்ட நாளுக்கென்று முத்திரையாக பெற்ற துணையா ளராகிய தேவ ஆவியானவர் உங்களோடு இருக்கின்றார் என்பதை திட்டமாக அறிந்து கொள்ளுங்கள். நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்ற தேவன் நம்மோடு இருக்கின்றார்.

ஜெபம்:

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவனே, நாம் சோர்ந்துபோகின்ற வேளையிலே பெலன் தந்து, சத்துவமில்லாத வேளையிலே; சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறதற்காய் நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:27-31