புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 30, 2022)

இருளிலே பிரகாசிக்கும் ஜீவ ஒளி

வெளி 22:5

தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார்.


ஒரு தாயானவள், பொழுது சாய்ந்து இருள் சூழ முன்பு தன் எளிமையான இல்லத்தில் வெளிச்சம் வீசும்படிக்கு விளக்கை ஏற்றினாள். பாவ இருள்சூழ்ந்திருக்கும் இந்த உலகத்திலே வாழ்ந்து கொண்டிந்த மனுஷருடைய மனமானது இருளடைந்திருந்தது. அந்த இருளிலே பிரகாசிக்கின்ற வெளிச்சமாக ஆண்டவராகிய இயேசு வந்தார். அந்த ஜீவ ஒளியை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேருடைய மனக்கண்களிலும் அந்த ஜீவஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. அந்த தேவ ஒளியானது, தேவனுடைய ஜீவ வசனத்தினால் உண்டாகின்றது. அவருடைய வசனம் நம் கால்களுக்குத் தீபமும், நம் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. கொஞ்சக் காலம் இந்த பூமியிலே பாடுகளை அனுபவிக்கின்ற நாம், பல தொல்லைகள் கஷ;டங்கள் கொண்டுவரும் அந்த பாவ இருளின் அதிகாரம் நம்மை மேற்கொ ள்ளாதபடிக்கு, தேவனுடைய ஆச்சரியமான ஜீவ ஒளியினிடத்திற்கு நாம் கொண்டு வரப்பட்டிருக்கின்றோம். இரவுக்கு விடியல் எல்லையாயிருக்கின்றது போல, ஜீவ ஒளியாகிய இயேசுவை பற்றிக் கொண்டவர்களின் வாழ்க்கையை சூழ்ந்திருக்கும் தொல்லைகளும் கஷ்டங்களும் நித்தியமானவைகள் அல்ல. இந்த உலகம் பாவ இருளுக்குள் மூழ்கியி ருக்கின்றது, அந்த உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கும்படி தீபத்தின் திரியைப் போல, நாம் எரிந்து பிரகாசிக்கின்றோம். ஆண்டவராகிய இயேசு மறுபடியும் வந்து நம்மை தம்மோடு சேர்த்துக் கொள்ளும் போது, பாவமில்லாத சாபமில்லாத, ஜீவ ஒளி பிரகாசிக்கும் தேசமாகிய பரம தேசத்திலே, நாம் பரமன் இயேசுவோடு நித்திய நித்தியமாய் சுகித்திருப்போம். எனவே, நம்மை சூழ்ந்திருக்கும் இந்த லேசான உபத்திரவம் சீக்கிரமாய் கடந்து போகும். தற்போது, ஜீவ ஒளியை நம் உள்ளத்திலே பிரகாசிப்பித்த கர்த்தரே பரலோகத்திலே ஒளியாய் இருப்பார். அங்கே இராக்காலமிராது. விளக்கும் சூரியனுடைய வெளி ச்ச மும் அவர்களுக்கு வேண்டுவதில்லை. எனவே அந்த தாயாளவள், மாலையிலே தன் வீட்டிலே விளக்கையேற்றியது போல, நாமும் இந்த உலகத்தின் வாழ்வு கடந்து போகும்வரை, நம்முடைய உள்ளங்களிலே தேவனுடைய ஜீவ வசனத்தை ஏற்றுவோமாக. நாமெல்லோரும் வெளி ச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கின்றோம். நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாய் விழிப்புடன் காத்திருப்போமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர் களாயிருந்து, இருளின் அந்தகார கிரியைகளுக்கு உடன்படாமல் விழிப்பு டன் தரித்திருக்க மனக் கண்களை பிரகாசிப்பீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:4-8