புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 29, 2022)

காலத்தை தாமதிக்காதிருங்கள்

சங்கீதம் 19:13

துணிகரமான பாவங்க ளுக்கு உமது அடியே னை விலக்கிக்காரும்


மனந்திரும்பும் பாவிகளுக்கு மன்னிப்பு உண்டு என்பதை விளக்கிக் கூறும்படிக்கு இயேசு கெட்ட குமாரனுடைய கதையை கூறினார். தன் தந்தையிடம்;, தனக்கு வரவேண்டிய ஆஸ்தியில் பங்கை பெற்றுக் கொண்டு, தன் தந்தையுடைய ஆளுகையை விட்டு, தூர தேசத்திற்கு சென்று, அங்கே தன் ஆசை இச்சைகளை நிறைவேற்றி, தான் பெற்ற ஆஸ்தியை முற்றிலும் அழித்துப்போட்டான். நாட்கள் கடந்து சென்று போது, அவ னுடைய புத்தி தெளிந்தது. அப்போது, எழுந்து புறப்பட்டு, தன் தந்தை வீட்டிற்கு வந்தான். அவன் தூரத்தில் வரும் போதே, அவனுடைய தந்தை அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத் தைக் கட் டிக் கொண்டு, அவனை முத்தஞ்செய்து அவனை ஏற்றுக் கொண்டார். அது போல நானும் அனுபவிக்க வேண்டியதை அனு பவித் துவிட்டு, நான் மனந்திரும்பி, தேவனிடம் மன்னிப்பை பெற்றுக் கொள்வேன் என்று ஒரு மனிதனானவன் தன் நண்பனுக்கு சொல்லிக் கொண்டான். தம்மிடம் உண்மையாக திரும்புகின்றவர்களை இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராகிய தேவன் ஏற்றுக் கொள்வார் என்பது உண்மை. தேவனாடு வாழும் மனிதர்களில் எத்தனை பேர், எண்ணற்ற தடவைகள், அறிந்தோ அறியாமலோ, சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் பரம தந்தையுடைய ஆளுகையைவிட்டு தூரம் சென்று திரும்பி வந்திருக்கின்றார்கள். உங்கள் வாழ்க்கையைக் கூட சற்று திரும்பிப்பாருங்கள். காரியம் அப்படியானால், என் வாழ்வை அனுபவித்துவிட்டு, அதன் பின்பு தேவனிடம் திரும்புவேன் என்று கூறுவதில் தவறு உண்டோ? ஒரு மனிதனாவன், திட்டமிட்டு பாவம் செய்வது, துணிகரமான பாவமாக இருக்கின்றது. இப்படிப்பட்டவர்கள், தங்களை மனப்பூர்வமாக பாவத்திற்கு ஒப்புக் கொடுக்கின்றார்கள். ஒருவேளை போஜனத்திற் காக தன் சிரேஷ்ட புத்திர பாகத்தை அற்பமாக எண்ணின ஏசாவைப் போல, இவர்கள் நித்திய ஜீவனுக்கென்று பெற்ற அழைப்பை பணைய மாக வைத்து சூதாடும் மனமுள்ளவர்கள். காலங்களும் நேரங்களும் கர்;த்தருடைய கரத்திலே இருக்கின்றது, ஆகவே அவர்கள் மனந்திரு ம்பும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் அல்லது மனதை இன்னும் அதிகமாக கடினப்படுத்திக் கொள்ளலாம் அல்லது காலத்திற்கு முன்பாக இந்த உலகத்தைவிட்டு சடுதியாக மரித்துப் போகலாம். ஒரு வேளை பாவத்திலே வாழும் நாட்களிலே, நினையாத நேரத்திலே ஆண்டவர் இயேசு மறுபடியும் வரலாம். எனவே தேவனுடைய கிரு பையை விருதாவாக்காமல், இன்றே தேவனிடம் திரும்புங்கள்.

ஜெபம்:

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, துணிகரமான பாவங்கள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும், அப்பொழுது நாம் பெரும் பாதகத்திற்கு நீங்கலாயிருப்பேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 2:4