புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 28, 2022)

தேவ ஆசீர்வாதங்கள்

லூக்கா 15:31

மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்கு ள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.


ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்க ளுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக் குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதே சத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். இந்த இளைய மகனானவன், தகப்ப னானவன் குறித்த காலம் நிறைவேற முன்பு, ஆஸ்தியின் தன் பங்கை கேட் டதற்கு காணரம் என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஆஸ்தியைப் பெற்றபின்பு சில நாட்களுக்குள் அவன் தன் தகப்பனானவன் இருக்கும் வீட்டையும், தேசத்தையும்விட்டு தூர மாக சென்று துன்மார்க்கமாய் வாழ்வதற்கு அவன் எடுத்துக் கொண்ட தீர்மானம், அவனுடைய மனதிலிருந்த ஆசை இச்சைகளை தெளிவாக வெளிக் காட்டுகின்றது. தேவன் குறித்த காலத்திற்கு முன் தேவபிள் ளைகள் தங்கள் வாழ்வில் எடுக்கும் எந்தத் தீர்மானமும் பொது வாக, தேவ பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கும் விருப்பங்களை வெளிக் காட்டுகின்றதாக இருக்கின்றது. நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல் லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; (லூக்கா 6:45). நாம்; எப்பொழு தும் அவரோடு வாழும் போது, அவர் நம் வலதுகையைப் பிடித்துத் தாங் குகின்ற வராயிருக்கின்றார். ஆலோசனையின்படி அவர் நம்மை நடத்தி, முடிவிலே நம்மை மகிமையில் ஏற்றுக்கொள்வார் (சங் 73:23-24). இப் போது; நம்முடைய பரம தந்தையாகிய தேவனுடைய வார்த்;தையின்படி தங்கள் வழிகளை காத்துக் கொண்டு வாழ்கின்றவர்கள், தந்தையாகிய தேவனுடைய வீட்டிற்கு கட்டுப்பட்டவர்கள், அவருடைய வீட்டிவேர தரி த்திருக்;கின்றார்கள். காலம் நிறைவேறும்போது, இவர்கள் பரலோகிலே நம்முடைய பரம தந்தையின் இல்லத்திலே நீடுழியாய் தங்கியிருப் பார்கள். பிரியமானவர்களே, நாம் தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்து வுக்கு உடன் சுதந்தரருமாயிருக்கும்படியான மேன்மையான அழைப்பை பெற்றிருக்கின்றோம். எனவே, பிதாவாகிய தேவனுடைய குறித்த நேரம் வரும்வரைக்கும் பொறுமை யோடே காத்திருப்போமாக.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, நீர் என்னை மகிமையிலே ஏற்றுக் கொள்ளும் நாள்வரைக்கும், உம்மை அண்டிக்கொண்டிருப்பதே எனக்கு நலமானது. உம் வழிகளிலே உறுதியாய் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:6-7