புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 27, 2022)

சிறப்பான சுதந்தரம்

சங்கீதம் 16:6

நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.


கோதுமை மணியானது முதிர்ச்சியடையும் பருவத்திலே, அதை விதைத்த தோட்டக்காரன், அறுவடை செய்ய ஆம்பிப்பான். தன் பிரயாசத்தின் பலனை கண்டடையும் நாள்வரைக்கும், பொறுமையோடே தன் தோட்டத்தை பராமரித்து வருவான். ஒரு மனிதனுக்கு குமாரத்தியயொருவள் இருந்தாள். அவனுடைய காலம் நிறைவேறி, ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்படும் நாள் வரைக்கும் அவள், தன் தகப்பனானவன் வீட் டிலே வாழ்ந்து வந்தாள். ஒரு மாணவனானவன் பல்கலைக்கழகத்திலே படித்துக் கொண்டிருந்தான். தன் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந் தது. அவன் அந்த பட்டம் எடுக்கும் நாள் வரைக்கும் தன் பாடங்களை கவனமாக கற்று வந்தான். இப்படியாக ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் ஒரு காலம் உண்டு. ஒரு பருவம் உண்டு. பலனானது முதிர்ச்சியடையும் நாளொன்று உண்டு. குறித்த அந்த நாளுக்கு முன்பாக நாம் ஒரு காரியத்தின் பலனை அடைய முயற்சி செய்யும் போது, பிஞ்சிலே பழங்களை பிடுங்கி, அதை செயற்கையாக பழுக்க வைத்து அதனாலே இலாபத்தை தேடும் மனிதர்களைப் போல இருப்போம். ஒரு பிள்ளை யானவன் தன் தகப்பனானவனுடைய சுதந்திரத்திற்கு உரிமையுள்ளவனாக இருக்கின்றான். அவனுடைய பங்கு நேர்த்தியான இடமான, அவன் தகப்பனானவனிடம் உண்டு. அவன் வளர்ந்து புருஷனாகும் நாள்வரைக்கும் தன் தந்தையின்வீட்டிலே அவனுக்கு கொடுக்கப்பட்ட காரியங்களை செய்து வருவான். ஆண்டவராகிய இயேசு வழியாக நித்திய ஜீவனுக்கென்று அழைப்பப்பட்ட நம் வாழ்விலும், அவர் குறித்த காலத்திலே, நமக்கு தேவையானவைகள் கொடுக்கின்றார். நாம் விரும்புகின்ற நாளிலே அல்ல, நம்முடைய பரம பிதா நியமித்த நேரத்தி லேயே நமக்கு தேவையானவைகளை அவர் தருகின்றார். அந்த தேவை கள் என்ன? நம்முடைய அடிப்படைத் தேவையாகிய உணவு, உடை, உறையுளிலிருந்து, நாம் நித்திய மகிமையிலே பிரவேசிக்கும் நாள் வரைக்கும், இந்தப் பூமியிலே நாம் கிறிஸ்துவுக்குள் வெற்றிசிறந்து வாழத் தேவையான யாவற்றையும், அவர் அதினதின் காலத்திலே நேர் த்தியாக செய்து முடிக்கின்றார். (பிரசங்கி 3:11, பிலி 4:19, மத் 6:32). எனவே பலன் முதிர்சியடையும் காலம் வரைக்கும் பொறுமையோடே, தேவ வார்த்தையின்படி வாழ்வை காத்துக் கொள்வோமாக.

ஜெபம்:

சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கின்ற தேவனே, என் நாட்களை அறிந்தவர் நீரே. உம்முடைய நேரத்திற்காக காத்திருக்க பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:7-8