புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 26, 2022)

பாடுகள் மத்தியில் பரம சந்தோஷம்

யோவான் 15:11

என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவானர், தேவனுடைய ரூபமாயிருந்தும், தம்மைத்தாமே தாழ்த்தி வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பாவமில்லாத பரிசுத்தராகிய அவர், நன்மை செய் கின்றவராக சுற்றிதிருந்தார். ஆனால், அவருடைய திருப்பணியின் பாதையிலே அவர் சந்தித்தித்த சில எதிர்ப்புக்களையும், அவைகள் மத்தியிலே அவர் எப்படியாக நிறைவான சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் இருந்தார் என்பதைக் குறித்து தியானம் செய்வோம். அவர் இந்த உலகிலே பிறந்த போது, யூதேயாவை ஆட்சி செய்த ஏரோது ராஜா அவரை கொன்று போடும்படி வகை தேடினான். அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டார். ஆண்டவராகிய இயேசு தமக்கு சொந்தமான ஜனங்களிடத்திலே வந்தார், ஆனால் அவர்களோ அவரை ஏற்றுக் கொள்வில்லை. அவருடைய இனத்தாரும் அவர் மதிமயங்கியிருக்கின்றார் என்று நினைத்தார்கள். மதத்தலைவர்களில் அநேகமான னோர் அவரை கொன்று போடும்படியாய் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவரோடு இருந்த சீஷர்களிலொருவனாகிய யூதாஸ்கா ரியோத் அவரை காட்டிக் கொடுத்தான். அவருடைய பிரதான சீஷனாகிய பேதுரு அவரை மறுதலித்தான். அவரோடிருந்த சீஷர்கள் யாவரும் பயத்தினால் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். ரோம அதிகாரிகள் அவரை அற்பமாக எண்ணினார்கள். படைவீரர்கள் அவரை ஏளனம் செய்து அவரை அடித்தார்கள். அவர் சிலுவையில் தொங்கும்போது அவ்வழியாய் போகின்றவர்கள் அவரை நகைத்தார்கள். இவைகள் மத்தியிலும் ஆண்டவராகிய இயேசு ஒவ்வொரு சந்தர்பங்களிலும், தம் முடைய பிதாவாகிய தேவனுக்கு கீழ்படிந்து, அவருடைய சித்தத்தை நிறைவேற்றியதினாலே, அவருக்குள் சந்தோஷம் நிறைவாக இருந்தது. அந்த சந்தோஷம் நம்மில் நிலைத்திருக்கும்படி ஆண்டவர் இயேசு பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத் திருக்கிறதுபோல, நாமும் இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொண்டி ருந்தால், அவருடைய அன்பிலே நிலைத்திருப்போம். அவருடைய சந் தோஷம் நம்மில் நிறைவாக நிலைத்திருக்கும். ஆதலால், நீங்கள் இளை ப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு தமக்கு விரோத மாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீத ங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.

ஜெபம்:

தேவனாகிய கர்த்தாவே, தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல் சிலுவையை சகித்த உம்முடைய திருக்குமாரனைப் போல நாமும் வாழும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-3