புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 24, 2022)

உறுதியான ஐக்கியம்

சங்கீதம் 16:11

உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்இ உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.


ஒரு ஊரிலே இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் கணிதத் துறையிலே பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். இருவருமே கிரி கெற் விளையாட்டில் அதிக பிரியமாக இருந்தார்கள். இப்படியாக எல்லாக் காரியங்களிலும் அவர்களுடைய போக்குகள் ஒன்றாயிருந்ததால் அவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அவர்களை பார்க்கும் யாவரும், அவர்கள் மிகவும் ஐக்கியமுள்ளவர்கள் என்று கூறிக் கொண்டார்கள். இப்படியாக அவர் களுடைய ஐக்கியமானது, இந்தப் பூலோகத்திலுள்ள காரியங்களை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் ஒரு வன் ஆண்டவர் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருந்தான், மற்றவன் கடவுள் நம்பிக்கையில்லாதவனாக நாஸ்திகன் என்று தன்னைக் கூறிக் கொண்டான். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த இரண்டு மனிதர்களும் ஒன்றுகூடும் போது, அவர்களுடைய நோக்கமானது தீமையானதாக இருக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடும் போது, கடவுள் நம்பிக்கை யைப் பற்றி பேசுவதைக் குறித்து தவிர்த்துக் கொண்டார்கள். அது அவர்களுக்கு பெருந்தன்மையாக தோன்றிற்று. மனிதர்கள் அதை பரந்த மனம் என்று கூறிக் கொள்வார்கள். மனிதர்களுடைய கொள்கைகள் எப்ப டியாகவும் இருக்கலாம் ஆனால் அவை இந்த உலகத்திற்குரியவைகள், இந்த உலகத்தோடு அழிந்துபோகும். அவைகள் குறுகிய காலத்திற்கு மனிதர்களுக்கு அற்பமான இன்பத்தையே கொடுக்கும். நம்முடைய ஐக்கியம் இந்த உலகத்தின் பொருட்களாலோ, கல்வி, சமுக அந்தஸ்து க்களாலோ மனிதர்களின் செயற்பாடுகளை மையமாகவோ வைத்து உண்டாகுவதில்லை. இப்படியானவைகள் உடைந்து போகும் ஐக்கியங்கள், ஆகவே இப்படிப்பட்ட ஐக்கியங்களால் உண்டாகும் இன்பமும் அற்றுப் போய்விடும். ஆண்டவராகிய இயேசுவை ஐக்கியத்தின் இணைப்பாக கொண்டிருப்பவர்கள் பாக்கியவான்கள். அந்த ஐக்கியத்தை ஒருவரும் உடைத்துப் போட முடியாது. கர்த்தரே அவர்கள் சுதந்தரமும், பாத்திரத்தின் பங்குமானவர்;. அதை தேவன் காப்பாற்றுகின்றார். கர்த்தரே அவர்க ளுடைய ஆலோசகராக இருக்கின்றார். அவர்கள் கர்த்தரையே எப்பொழுதும் தங்களுக்கு முன்பாக வைத்திருப்பதால் அவர்கள் இருதயம்; பூரிக்கும். ஆத்துமா களிகூர்ந்து, கர்த்தரை தன் நம்பிக்கையாய் கொண்டிருப்பதால், அது பாதாளத்தின் அழிவைப் காண்பதில்லை. கர்த்தர் ஜீவமார்க்கத்தை அவர்களுக்கு போதிக்கின்றார்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் ஐக்கியத்திலே நிலைத்திருக்காமல், நித்தியகாலமாய் நிலைத்திருக்கும் உம்முடைய ஐக்கியத்திலே இணைந்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:1-5