புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 23, 2022)

நன்மையும் இன்பமும்

சங்கீதம் 133:1

இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?


உலக பிரசித்தி பெற்ற விளையாட்டு குழு ஒன்று, முன் குறிக்கப்பட்ட தொரு நாள் ஒன்றிலே, ஒரு பட்டணத்திற்கு வருகை தந்ததால், பெருந் தொகையான மக்கள், அவர்களை பார்க்கும்படி கூடி வந்தார்கள். அந்த நாள் ஒரு கிழமை நாளாக இருந்தபோதும் அநேகர் தங்கள் வேலைக்கோ, பாடசாலைக்கோ செல்லாமல், எப்படியாவது அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதில் மன உறுதியாய் இருந்தார்கள். ஏனெனில், அந்த ஓன்று கூடல் அவர்களுடைய பார்வைக்கு நன் மையுள்ளதாக தோன்றிற்று. ஆயிரக்க ணக்கான மக்கள் கூடியிருந்த அந்த இடத்திலே, இரண்டு குழுக்களாக மனி தர்களுகிடையிலே ஏற்பட்ட கருத்து முர ண்பாடு, வாக்குவாதமாகி, பெரும் கல வரத்திலே முடிவடைந்தது. ஒரே பட்டணத்தைச் சேர்ந்த, அநேக ஜன ங்கள், ஒரு இடத்தில் கூடிவந்தபோதும், அவர்கள் மத்தியிலே ஒருமன மும் ஐக்கியமும் இருக்கவில்லை. இதினிமித்தம் அங்கே முரண்பா டுகளும், வாக்குவாதங்களும், கலவரங்களும் உண்டாயிற்று. பல மனித ர்களுக்கு நன்மையாக தோன்றிய ஒன்றுகூடல், முடிவிலே அவர்களுக்கு இன்பமாக அமையவில்லை. இந்த உலகிலே அநேகர், பல நோக்கங்க ளுக்காக, வௌ;வேறு இடங்களிலே ஒன்று கூடுகின்றார்கள். ஒன்றுகூட ல்கள் எல்லாம் நன்மையானவைகள் அல்ல. சில நன்மையாக தோன்றி னாலும் அவை இன்பமாக அமைவதில்லை. இன்னும் சில ஒன்றுகூட ல்கள், தீமையும் கொடுமையும் நிறைந்தாக இருக்கும். ஆனால், தேவ னாலே அழைக்கப்பட்ட தேவ ஜனங்களாகிய நமது ஒன்றுகூடல்கள் நன்மையும் இன்பமுள்ளதாக இருக்க வேண்டும். ஆண்டவர் இயேசுவின் நாமத்திலே, கூடிவ ருவது நன்மையானது. ஆனால் அவை ஒரு சிலரு க்கு ஏன் இன்பமாக இருப்பதில்லை? சிலவேளைகளிலே, தேவ ஜன ங்கள் கூடிவரும் போது வேறுபட்ட நோக்கங்கள் இருப்பதனால், அங்கே ஐக்கிமும் ஒருமனமும் இருப்பதில்லை. அதனால், ஒரு சிலரு க்கு அது இன்பமாக இருப்பதில்லை. இயேசுவின் நாமத்தை கூறி, அவ ருடைய நாமத்திலே ஒன்று கூடும் ஒவ்வொருவரும், திராட்சை செடி யிலே, கொடிகள இணைந்திருப்பது போல, தனிப்பட்ட ரீதியாக ஆண் டவராகிய இயேசுவிலே ஒட்டப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அப் படி ஒட்டப்பட்டவர்கள், தங்கள் அபிப்பிரயாங்களையும், கருத்துக்க ளை யும் தள்ளிவிட்டு, பிதாவாகிய தேவனுடைய நாமம் தங்களால் மகிமை ப்படுவதைதே நோக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடைய மனதிலே நித்திய பேரின்பம் எப்போதும் இருக்கும்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, என் மனதிலே உம்மைக் குறித்த பேரின்பம் இருக்கும்படியாக, என்னுடைய ஐக்கியமானது உம்மோடும், உம்மு டைய திருக்குமாரனாகிய இயேசுவோடும் இருப்பதாக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:1-5