புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 22, 2022)

பண்டிகைகளை கொண்டாடுங்கள்

1 யோவான் 2:16

ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவி னாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.


கிறிஸ்தவ நாட்காட்டியிலே, வேத பிரமாணங்களின்படி, பல பண்டிகைகளும், மனிதர்களால் முன்குறிக்கப்பட்ட நினைவுகூருதலின் விசேஷpத்த நாட்களும் குறிக்கப்பட்டிருக்கின்றது. அந்த நாட்களில், அதிகபடியானவைகளை நாம் கொண்டாடி வருகின்றோம். பண்டிகைகளை கொண்டாடி மனம் மகிழ்ந்திருப்பது நல்லது. ஆனால் நாம் கொண்டாட்டம்;, களியாட்டம் என்ற பதங்களுக்கிடையேயுள்ள வேற்றுமைகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்துவை சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு ஒரு அலங்காரம் உண்டு. அந்த அலங்காரம் பரிசுத்தமே. 'பரிசுத்த அலங்காரம்' நம்முடைய வாழ்வின் மையமாக இருக்கவேண்டும். அதற்கு விதிவிலக்குகள் இல்லை. பரிசுத்த அலங் காரத்திலே சமரசம் இருக்கலாகாது. நாம் ஆண்டவர் இயேசுவை அறிய முன்பதாக, நம் இருதயமானது உணர்வற்றுப் போனதினாலே, நாம் தேவனல்லாதவர்களோடு சேர்ந்து, அவர்கள் இஷ்டத்தின்படி நடந்துகொண்டோம். அங்கே காமவிகாரத்திற்கு ஏற்ற நடை, உடை, பாவனைகளும், மதுபானம் பண்ணுதல், களியாட்டுச் செய்தல், வெறிகொள்ளுதல், அதை தொடர்ந்து வரும் ஆகாத சம்பாஷணைகள், நெறிமுறையற்ற நடத்தைகளும், அலங்கோலமான காட்சிகளும், துர்இச்சைகளை நடப்பிக்கக்கூடிய சூழலும், அருவருப்பான விக்கிரகாராதனைக்குரிய சடங்குகள் அடங்கிய துன்மார்க்க உளையிலே இருந்தோம். உலக போக்கோடு நாம் ஒத்து ஓடின நாட்களிலே அவர்கள் நம்மைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவினால் உண்டான மறுவாழ்வை பெற்றுக் கொண்ட போது, அந்தத் துன்மார்க்க உளையிலே, உலகத்தாரோடு நாம் விழாம லிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, நம்மை தூஷpக்கின்றா ர்கள். இவைகளிலிருந்து மனிதர்கள் விடுதலையடையும்படிக்கே ஆண்ட வராகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். ஆனால் இன்று பல மனிதர்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்து எவைகளைலிருந்து விடுதலை கொடுக்க வந்தாரோ, அந்த அருவருப்புள்ள களியாட்டங்களால் கிறிஸ்தவ விசேஷ நாட்களை கொண்டாடுகின்றார்கள். இப்படிப்பட்ட களியாட்ட ங்கள் தேவனால் உண்டானவைகள் அல்லவே.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, கோணலும் மாறுபாடுமான சந்ததி நடுவிலே கறையற்ற வாழ்க்கை வாழ்ந்து, இருளடைந்திருக்கும் உலகத் திலே உம்முடைய வெளிச்சத்தை வீசும்படி என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 4:1-5