புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 21, 2022)

மாசில்லாத சுத்தமான பக்தி

யாக்கோபு 4:8

இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்


மேற்கத்தைய நாடொன்றிலே வாழ்ந்து வந்த சில இளம் மனிதர்கள், தங்கள் மதக் கொள்கைக்கு ஏற்புடையதாய், அவர்களுக்கு கொடுக்கப் பட்ட கால அட்டவணையின்படி, குறிப்பிட்ட நாட்களுக்கு, உபவாசத்தி லும், வழிபாடு களிலும் நேர்த்தியாக ஈடுபட்டு வந்தார்கள். அந்த நாட் கள் நிறைவேறும் தருவாயில், அவர்கள் கூடி, அந்த நாட்கள் முடிந்த பின்பு தாம் செய்ய போகும் காரியங் களைக் குறித்து திட்டமிட்டுக் கொண் டிருந்தார்கள். அதன்படிக்கு, தங்கள் மத ச்சடங்குகள் முடிந்த பின்பு, இடாம்பீகர மான ஒரு சூதாட்ட விடுதிக்கு சென்று அங்கே தங்கள் நேரத்தையும் பணத்தை யும் செலவிடுவதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த வேளை யிலே, அவர்களுக்கு அருகிலுள்ள மனிதனொருவன், அவர்களை நோக்கி: நீங்கள் செய்வது உங்கள் மனசாட்சிக்கு சரியாகத் தோன்றுகின்றதா? மிக வும் கடமையுணர்வோடு, மதச்சடங்குகளை நேர்த்தியாக கடைப்பித்து, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்கின்றீர்கள். அந்த நாட்களுக்கு பின்பு, உங்கள் பணத்தையும் நேரத்தையும் சூதாட்ட விடுதியிலே அழித்துப் போட ஆலோசனை செய்கின்றீர்களே என்று அவர்களிடம் தயவாக கூறி னான். அவர்கள் அந்த மனிதனுடைய வார்த்தைகளை சற்றேனும் பொரு ட்படுத்தாமல், தங்கள் வழியே சென்று விட்டார்கள். பிரியமானவர்களே, நாம் காண்பிக்கும் தேவபக்தியானது யாரைப் பிரியப்படுத்துகின்றது என்பதைக் குறித்து நாம் எச்சரிக்கை யுள்ளர்களாக இருக்க வேண்டும். சில மனிதர்களோ தங்கள் தேவபக்தியை குறித்த காரியத்திலே, பெற் றோர், போதகர்கள், ஊரில் வாழும் ஜனங்கள், மற்றும் சகவிசுவாசி களை திருப்திப்படுத்துவதினாலேயே அவர்கள் சுயதிருப்தியடையின் றார்கள். சில சமயங்களிலே, தாங்கள் உபவாசித்த நாட்களுக்கும், ஜெப த்திலே தரித்திருந்த நேரத்திற்கும் அதிகமாக, அதன் முடிவிலே, போஜன பதார்த்தங்களையும், குடிவகைகளையும், களியாட்டங்களையும் திட்டமி ட்டு நடத்துகின்றார்கள். இது தேவனுக்கு பிரியமான தேவ பக்தியல்ல, இப்படிப்பட்டவர்கள் இரு மனமுடையவர்கள். இவர்கள் மனம் உலக கவலைகளாலும் பெருந்தி ண்டிகளினாலும் நிறைந்தி ருக்கின்றது. நம்முடைய தேவபக்தியானது வருடத்தின் ஒரு குறித்த நாட்களுடன் முடிவடையும் காரியமல்ல. பிதாவாகிய தேவனுக்கு முன் பாக மாசில்லாத சுத்தமான பக்தி எது? நாம் திக்கற்றவர்களுக்கும், வித வைகளுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்ய வேண்டும். அதே நேரத் திலே இந்த உலகத்தின் போக்கினாலே நம்மை நாம் கறைபடுத்தாமலும் இருப்பதே தேவன் பிரியப்படும் சுத்தமான பக்தியாயிருக்கிறது.

ஜெபம்:

மனதின் யோசனைகளை அறிந்த தேவனே, மனிதர்களை திருப்திப்படுத்தி, சுயதிருப்தியடையாமல், உமக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்து நித்திய ஜீவனிலே பிரவேசிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:27