புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 20, 2022)

தேவனுக்கேற்ற நற்கிரியைகள்

மத்தேயு 6:1

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;


ஒரு தேசாதிபதியின் கொடுங்கோல் ஆட்சியினால், குறிப்பிட்ட ஊரிலு ள்ள ஜனங்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். பஞ்சம், வறுமை, வியா தியினால் ஜனங்கள் அனுதினமும் வெகுவாய் நெருக்கப்பட்டார்கள். புறதேசத்திலுள்ள அரசனொருவன், அந்த ஊர் ஜனங்களின் தவிப் பைக் கேள்விப்பட்டு, அந்த ஊரை தன்வ சமாக்கிக் கொண்டு, அந்த ஊரிலி ருந்த துஷ;ட மனிதர்களை அழி த்து, ஜனங்களின் ஏழ்மையை நீக்கி, விடு தலையை பிரகடனப்படுத்தினான். இதினிமித்தம், அந்த அரசனானவன், வருடந்தோறும் அந்த ஊருக்கு சென்று சில நாட்கள் அங்கே தங்கி யிருப்பது வழக்கமாக இருந்து வந் தது. அந்நாட்களை, ஜனங்கள் விசே ஷpத்து, அந்த அரசனின் பெயரிலே, ஏழை எளியவர்களுக்கு அதிகமாக உதவி வந்தார்கள். பல ஆண்டுகள் கடந்து சென்றதும், மக்கள் மன திலே, இந்த நற்கிரியையானது கருத்தற்றுப் போய்,இந்த நிகழ்ச்சி ஒரு சடங்காச்சாரமாக மாறிவிட்டது. அரசன் தங்கள் ஊருக்கு வரும் நாட்க ளிலே, ஏழை எளியவர்களை ஆதரித்து, தங்குவதற்கு தங்கள் வீட்டிலே இடங் கொடுத்தார்கள். அந்த நாட்கள் முடிவடைந்ததும், ஏழை எளியவர் களை தங்கள் இடங்களிலிருந்து விரட்டியடித்து விடுவார்கள். சற்று இந்த சம்பவத்தை குறித்து சிந்தித்துப் பாருங்கள். நற்கிரியைகளு க்காக நாட்களை விசேஷிப்பது நல்லதல்லவா? ஏழை எளியவர்களுக்கு உதவுவது நன்மையானதல்லவா? அப்படியானால் இந்த சம்பவத்திலே இருக்கும் தவறான செயல் என்ன? அந்த ஊராரின் மனமானது அவர்கள் செய்யும் நற்கிரியைகளோடு இசைந்திருக்கவில்லை. பிரியமானவர்களே, வருடந்தோறும் நாட்களை விசேஷpத்து, கிறிஸ்துவின் பாடுகளை தியானிப்பதும், பல தியாகங்களையும், ஒறுத்தல்களையும், அன்னதானங்களையும், உபவாசங்களையும் ஏறெடுப்பது நல்லது. ஆனால், அந்த நாட்கள் முடிந்த பின்பு, மேலே கூறப்பட்ட சம்பவத்திலுள்ள ஊராரைப் போல, நம்மிடமிருக்கும் நற்கிரியைகளை நம்மைவிட்டு விரட்டியடித்தது போல, நாம் செய்த உபவாசங்கள், தியாகங்கள், அன்னதானங்களுக்கு மேலாக உண்பதிலும், குடிப்பதிலும், களியாட்டத்திலும் ஈடுபடுவோமென்றால் நம்முடைய நற்கிரியைகள் கருத்தற்றதாகவும் மதச் சடங்காட்சாரமாகவும், தேவனுக்கு பிரியமற்றதாகவும் இருக்கும். எனவே, செய்யும் நற்கிரியைகள் நம்முடைய வாழ்நாள் முழுவதும் நம் சுபாவமாக மாற வேண்டும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, நான் செய்யும் நற்செயல்கள் கருத்துள்ளதாகவும், உமக்கு பிரியமானதாகவும் இருக்கும்படிக்கு என் மனதை செம்மைப் படுத்தி வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 18:23-35