புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 18, 2022)

கர்த்தரை அறிந்தவன் யார்?

யோவான் 15:4

ஆண்டவர் இயேசு சொன்னார்: என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்;


ஒரு தேசத்தை ஆட்சிசெய்து வந்த ராஜாவானவன், நீதியுள்ளவனும், முகதாட்சண்யம் இல்லாமல் நியாயம் விசாரிக்கின்றவனுமாக இருந்தான். அவனுடைய ஆட்சியை அந்தத் தேசத்திலுள்ள பலரும்; பாராட்டினார்கள், ஆனால் அவர்கள் தங்கள் கண்போன வழிகளிலேயே வாழ்ந்து வந்தார்கள். வேறு சிலர் எப்போதுமே ராஜாவை எதிர்த்து நின்றார்கள். இன்னுமொரு சாரார், ராஜாவின் ஆட்சியை பாராட்டி, அதனை ஏற்றுக் கொண்டார்கள். பின்பு, நாங் கள்; ராஜாவை ஒருமுறை ஏற்றுக் கொண்டோம், அது போதுமானது என்ற எண்ணமுடையவர்களாய் தங்கள் வழிகளிலே வாழ்ந்து வந்தார்கள். குறிப்பிட்ட சில மனிதர்கள், அந்த ராஜாவினுடைய ஆட்சியைப் பாராட்டி, அதை ஏற்றுக் கொண்டு, தங்களை அந்த ராஜாவினுடைய ஆட்சிக்கு மனதார அர்ப்பணித்துக் கொண்டார்கள். மேலே குறிப்பிடப்பட்ட நாலு சாரார்களிலே யார் ராஜாவுக்கு விசுவாசமானவர்கள்? யார் உண்மையிலே ராஜாவின் ஆட் சியை ஏற்றுக் கொண்டார்கள்? எந்த சாரார்மேல் அந்த ராஜா பிரியமானவராய் இருப்பான்? ராஜாவின் நீதியும் நியாயமும் வெளிப்படும் போது யார் அதற்கு கீழ்படிகின்றவர்களாக காணப்படுவார்கள்? அந்த ராஜாவினுடைய ஆட்சியை பாராட்டி, அதை ஏற்றுக் கொண்டு, தங்களை அந்த ஆட்சிக்கு மனதார அர்ப்பணித்துக் கொண்டவர்களே அந்த ராஜாவிற்கு பிரியமானவர்களாக இருப்பார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, ஆண்டவர் இயேசுவை விசுவாசிப்பதும், ஏற்றுக் கொள்வதும் என்ற தலைப்பின் கீழே இன்று மனிதர்கள் மத்தியிலே அநேக பாகுபாடுகள் உண்டு. இன்று பலர் ஆண்டவர் இயேசுவின் அன்பின் மேன்மையை அறிந்திருக்கின்றார்கள், அதை குறித்து தங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றார்கள், அவரை ஏற்றுக் கொள்கின்றார் கள். ஆனால் அவருடைய வார்த்தையிலே நிலைத்திருந்து அதன்படி வாழ்வதற்கு தங்களை ஒப்புக்கொடுக்காமல், தங்கள் கொள்கைகளின் படியேயும், தத்துவங்களின்படியேயும் வாழ்ந்து வருகின்றார்கள். அப்படியிருந்தும், நாங்கள் இயேசுவை அறிந்திருக்கின்றோம் என்று கூறுகி ன்றார்கள். பிரியமான வர்களே, நாம் அப்படியிருக்கலாகாது, இயேசு கிறிஸ்துவை நம் ஆண்டவர் என்று அழைத்தால், அவர் நம் வாழ்வை ஆளுகை செய்யும்படி, அவரிடம் நம்மை முற்றுமுழுவதுமாய் ஒப்புக் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களே இயேசுவால் அறியப்பட்டவர்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, என் நாட்கள் கடந்து போவதற்கு முன்னதாக, நான் உம்மிலே நிலைத்திருப்பதன் அவசியத்தை உணரு ம்படி பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 6:46-49