புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 17, 2022)

பாவத்தை போக்கும் பரிகாரி

ரோமர் 3:24

இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;


ஏன் இயேசு கிறிஸ்து சிலுவையிலே மரித்தார்? அன்றும் இன்றும் தேவ பக்தியுள்ள மனிதர்கள் தங்கள் குற்றங்கள், மீறுதல்கள், மறைவான பாவங்கள் போன்றவற்றிலிருந்து விடுதலையடையும்படியாக பலவிதமான பலிகளையும், காணிக்கைகளையும், அன்னதானங்களையும் செலுத்தி, தங்கள் பாவ சாபவங்களுக்காக பிராயசித்தம் செய்கின்றார்கள். மனிதர்கள் யாவரும் ஒரு நாள் மரிக்க வேண்டும் ஆனால் அதன்பின்பு நரகத்திலே நித்திய ஆக்கினையாகிய இரண்டாம் மரணத்தை அடைந்து கொள்ளாமல், மோட்சத்திலே பரமனோடு நீடுழியாக வாழும்படிக்கு, இந்த பூமியிலே வாழும் நாட்களிலே பாவதிற்கான பரிகாரத்தைத் தேடுகின்றார்கள். ஏனெனில், நம் ஆதிப் பெற் றோராகிய ஆதாம் ஏவாள் தேவ கட்டளையை மீறி தலினாலே, அவர் கள் பாவம் செய்து, தேவ சாயலை இழந்து, தேவ மகிமையை இழந்து போனார்கள். அதனால், அவர்களும் அவர்கள் வழி வந்த மனிதகுலம் யாவும் சாபத்திற்குள்ளானது. அதனால் யாவரும் நித்திய ஆக்கினைக்கு ட்பட்டவர்களாhனார்கள். வேறு வழியோ, தெரிவுகளோ மனித குலமா கிய நமக்கு இருக்கவில்லை. மனித குலத்தின்மேல் உண்டான அந்த சாபத்தை நீக்கி இழந்து போல தேவ சாயலை அடையும்படியான வழியை ஏற்படுத்துதற்கு, பாவமில்லா ஒருவர் பரிகாரம் செலுத்த வேண் டும். மனித குலத்தின் சாபத்தின் விலையை கொடுக்க வேண்டும். மனித ர்கள் யாவரும் பாவம் செய்து ஏகமாய் கெட்டுப் போனார்கள். அத னால், பரிசுத்தராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தம்மை தாழ்த்தி, மனித னாக இந்தப் பூமிக்கு வந்தார். மனித குலத்தின்மேலிருந்து சாபத் தை நீக்கும்படி, அதை தம்மேல் ஏற்றுக் கொண்டு, தம்மைத் தாமே பலி யாக ஒப்புக் கொடுத்து, தூய இரத்தத்தை சிந்தி, மரித்து, மரணத்தை ஜெயம் கொண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அந்த நாளை இன்று நாம் நினைவுகூருகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனித குலத்திற்கு நித்திய வாழ்வடையும் வழியை ஏற்படுத்தி, உங்களுக்கும் எனக்கும் தெரிவுகளை ஏற்படுத்தினார். இந்த நற்செய்தியை அற்பமாக எண்ணு கின்றவர்கள் தாங்கள் கெட்டுப் போவதற்கு ஏதுவாக தங்கள் இருதயங்களை கடினப்படுத்துகின்றார்கள். இந்த நற்செய்தியை விசுவா சிப்பவர்களுக்கு நித்திய வாழ்வை அடையும் கிருபையை தேவன் கொடுத்திருக்கின்றார். இன்றே உங்கள் வாழ்வை ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்வு அடையும்படிக்கு என்னை அழைத்த தேவனேஇ கெட்டுப் போவதற்கேதுவாக நான் என் இருதயத்தை ஒரு போதும் கடினப் படுத்தாதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:1-9