புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 16, 2022)

பெரும் பிளவு

1 கொரி 1:18

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது


பரந்த தேசமொன்றிலே வாழ்ந்து வந்த மனிதர்களில் அநேகர், தாம் வாசம் பண்ணும் தேசத்திலே சிறப்பான வாழ்வு இல்லை என்று அறிந்து கொண் டவர்களாய், சீரும் சிறப்புடனுமாக இருக்கும் புறதேசத்திற்கு செல்லு ம்படியாக புறப்பட்டார்கள். அவர்களுள்: பெரியவர்களும், பிரபுக்களும், உயர்ந்தவர்களும், தாழ்ந்தவர்களும், ஐசுவரியவான்களும், ஏழைகளும், சன் மார்கர்களும், துன்மார்க்கர்களும், கற்ற வர்களும், கல்லாதவர்களும் போன்ற பலதரப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்கள் தங்கள் கொள்கை களின்படி, பல பிரிவுள்ளவர்களாகவும், சிறு குழுக்களாகவும், பல்வேறு வாக னங்களிலே ஏறி புறதேசத்தை நோக்கி பயணம் செய்தார்கள். பல நாட்கள் சென்றபின்பு, அவர்கள் வாழ்ந்த தேசத்தின் எல்லை முடிவடைடையும் விளி ம்பிற்கு அருகே வந்தார்கள். அங்கே வந்தபோதுதான், தாங்கள் வாழ்ந்து வந்த தேசத்திற்கும், தாம் செல்லப் புறப்பட்ட சீரும் சிறப்புமான புறதே சத்திற்கும் இடையிலே யாரும் கடந்து போகமுடியாத பெரும் பிளவு இருப்பதை கண்டு கொண்டார்கள். அந்த இடத்திலே இருந்த ஒருவர், என்னிடத்திலே வாருங்கள், நான் உங்களை அந்தப் புறதேசத்திற்கு கொண்டு செல்வேன். அந்த வழியை நானே ஏற்படுத்தியிருக்கின்றேன் அதனால் என்னையன்றி ஒரு வரும் அந்த வழியை அறியமாட்டார்கள் என்று தயவாக அழைத்தார். அவருடைய பேச்சை கேட்ட, பெரியவர்களிலும், உயர்ந்தவர்களிலும், பிரப்புக்களிலும், கல்மான்களிலும் பலர் அவரை அற்பமாக எண்ணி ஏளனம் செய்தார்கள். வேறு சிலரோ அவரை சந்தேக ப்பட்டார்கள். ஆனால் ஒரு சிலர் அவர் கூறியதை ஏற்றுக் கொண்டு அவருக்கு பின்னாக சென்றார்கள். தன் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டவ ர்களை அவர் அந்த சீரும் சிறப்புமான புறதேசத்தி ற்கு கொண்டுபோய் சேர்த்தார். ஆம், பிரியமானவர்களே, அந்த மனிதர்கள் வாழ்ந்த பரந்த தேச மானது இந்த பூமி. அங்கே வாழ்ந்த பலதரப் பட்ட மக்கள் பல விதமான மதங்களையும் கொள்கைகளையுடையவர்கள். செல்ல வேண்டிய சீரும் சிறப்புமான புறதேசம் பரலோகம். பூமிக்கும் பரலோகத்திற்கும் இடையிலே இருக்கும், அந்த பெரும்பிளவினை சீர்படுத்தும்படி ஆண்டவராகிய இயேசு தாமே சிலுவை மரணத்தினாலே வழியை ஏற்படுத்தினார். அந்த உபதேசத்தை அற்பமாக எண்ணுகின்றவர்கள், தங்கள் நித்திய அழிவை தாங்களே நியமித்துக் கொள்கின்றார்கள். சிலுவையை பற்றி உபசேத்தை விசுவாசிக்கின்றவர்கள் அதனால் உண்டாகும் நித்திய ஜீவனை கண்டடைகின்றார்கள்.

ஜெபம்:

என்மீது அன்பு கூர்ந்த தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகயிருக்கும் ஞானத்தினாலே என் மனம் குருடுபட்டுபோகாதபடிக்கு, எப்போதும் உம்மை அண்டி உம் வழியிலே முன்னேற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:6