புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 15, 2022)

இருதயத்திலே விசுவாசி

ரோமர் 10:9

கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மூன்று மனிதர்களில், முதலாவது மனிதன் ஐசுவரியவானாகவும், இரண்டாவது மனிதன் சராசரியாக உழைப்பவனா வும், மூன்றாவது மனிதன் ஏழையாகவும் இருந்தார்கள். ஐசுவரியவான்: நான் கடுமையாக பிரயாசப்பட்டேன். அதற்குரிய பலனைக் கண்டேன். ஆசீர்வாதங்கள் நிறைந்தவனாக வாழ்கின்றேன் என்றான். சராசரியாக உழைப்பவன்: என் உழைப்புக்குதக்க தாக வாழ்கின்றேன். நான் எதையுமே இச்சிப்பதில்லை என்றான். ஏழையான வன்: ஒவ்வொரு நாளும் நான் பெரு ம்பாடுகளையும் கஷ்டங்களையும் சகி த்து அவைகள் மத்தியிலும் நான் வாழ் க்கையை நடத்திச் செல்கின்றேன் என்று கூறினான். இவர்கள் மூவருமே சன்மார்க்கமான வழியிலே வாழ்ந்து வந்தார் கள். இவ்வாறாக மனிதர்கள் தங்களு குண்டான மேன்மையைக் குறித்தும், தங்கள் நீதியின் கிரியைகளைக் குறித்தும், தங்கள் வாழ்விலே ஏற்படும் பாடுகள், நெருக்கங்களைக் குறித் தும், மேன்மை பாராட்டுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். ஆனால், மனி தர்கள் தங்கள் நீதியின் கிரியைகளினால் தேவனை பிரியப்படுத் தவோ அல்லது தங்கள்; ஆத்துமாவை இரட்சித்துக் கொள்ளவோ முடியாது. மனிதர்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இரு க்கிறது. எனவே மனிதகுலம் மீட்படைய வழி ஏதும் இருக்கவில்லை. அதனால் தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன் புகூர்ந்தார் (யோவான் 3:16). இன்று உங்கள் வாழ்க்கையானது எப்படிப்பட்டதாக இருந்தாலும், உங்கள் நற்கிரியைகளினாலேயோ, சுயநீதி யினாலேயோ, சன்மார்க்கமான வாழ்க்கையினாலேயோ நீங்கள் நித்திய ஜீவனை அடைந்து கொள்ள முடியாது என்னும் உண்மையை தெளி வாக அறிந்து கொள்ளுங்கள். ஆண்டவராகிய இயேசு என் மீறுதல்களி னிமித்தம் காயப்பட்டு, என் அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்படடு, என் பாவங்களின் தண்டனையை தம்மேல் சுமந்து, தம்மை பலியாக ஒப் புக் கொடுத்து, மரணத்தை ஜெயித்து உயிர்தெழுந்தார் என்பதை தன் இருயதத்திலே விசுவாசித்து ஏற்றுக் கொள்கின்றவனே ஆத்தும மீட்பை பெற்றுக் கொள்கின்றான். பிரியமானவர்களே, இன்றே இரட்சண்ய நாள். உங்கள் இருதயத்தை ஆண்டவர் இயேசுவிடம் ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

அநாதி ஸ்நேகத்தால் என்னை நேசித்த தேவனேஇ நான் நித்திய வாழ்வை பெற்றுக் கொள்ளும்படிக்கு உம்முடைய குமாரன் இயேசுவை எங்களுக்காக கொடுத்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 53:1-12