புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 14, 2022)

என் சித்தமல்ல உம்சித்தம் நிறைவேறட்டும்

ஏசாயா 53:7

அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை;


ஜனங்கள் பரபரப்பாக காணப்படும் ஒரு ஊரின் மத்திய பகுதியிலே ஜன ங்கள் தங்கிச் செல்வதற்கென ஒரு வசதியான தங்கும் விடுதியானது (Hotel) கட்டப்பட்டிருந்தது. விடுதியை கடந்து செல்லும் வியாபாரிகள், உல் லாசப் பயணிகள், அந்நியர்கள், வழிப்போக்கர்கள் வேண்டிய நேரத்திலே, அந்த விடுதியில் இருக்கும் தங்கள் வசதியின்படி அறை யொன்றை முன்பதிவு செய்து தங்கிச் செல்வது வழக்கமாக இருந்தது. அதிக வாடிக்கையாளர்கள் அந்த தங் கும் விடுதிக்கு வருவதனால், அதன் உரிமையாளருக்கு அது அதிக இலா பத்தை கொடுத்தது. ஆனால் நாம் வசிக்கும் இல்லமானது தங்கும் விடு தியைப் போலல்ல. அங்கே ஒழுங்கு முறைகள் உண்டு. அதாவது, அந்நியர்களும், வழிப்போக்கர்களும், நினைத்த நேரத்;தில், தங்கள் எண்ண ப்படி நம்முடைய இல்லத்திற்குள் போக்கும் வரத்துமாக இருக்க முடி யாது. நம்முடைய இருதயமும் நாம் வசிக்கும் இல்லத்திற்கு ஒத்ததா கவே இருக்க வேண்டும். இந்த உல கத்தின் போக்குகளும், மாம்சத்தின் இச்சைகளும் போக்கும்வரத்துமாக இருக்கும் இல்லமாக நம் இருதயம் இருக்குமாயின் நம்முடைய வாழ்வும் நிம்மதி இழந்த வாழ் க்கை யாகவே இருக்கும். எதிராளியாகிய பிசாசானவன், அற்பமானதும், சிறிதானதும், மனித எண்ணத்திற்கு பாதகமில்லை என்று தோன்றும் மிகவும் சிறிதான மாம்சத்தின் வித்துக்களையே நம் இருதயத்திற்குள் விதைத்து விடுகின்றான். அவைகளில்; இரண்டு காரியங்களை இன்று ஆராய்ந்து அறிந்து கொள்வோம். வழிப் போக்கனைபோல வரும் முறு முறுப்பும் கசப்பும் மிகவும் சிறிதாகவே நம் உள்ளத்தில் ஆரம்பிக்கும். பின்பு, அது நம் இருதயத்தில் வேர் கொண்டு, நம் இல்லமான இருதயத்தை முற்றாக கெடுத்துவிடும். பிரியமானவர்களே, நாம் வேலை செய்யும் இடம், கல்வி கற்கும் பாடசாலை, வசிக்கும் இல்லம், சபை ஐக்கியம் யாவும் இந்த உலகத்திலேயே இருக்கின்றது. ஆகவே, அங்கே குறைவுகள் இரு க்கும் அல்லது குறைவுகளை உண்டு பண்ணும் சிலர் இருப்பார்கள். குறை களை நாம் காணும் போது, நமக்காக பாடுகளை சகித்த நம்முடைய மீட்பராகிய இயேசுவை நினைத்துக் கொள்ளுங்கள். பிதாவாகிய தேவ னின் சித்தம் தன்னில் நிறைவேறும்படிக்கு, அடிக்கப் படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரி க்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். நாமும் அவரைப் போல பிதா வின் சித்தம் நிறைவேற இடம் கொடுப்போமாக.

ஜெபம்:

சமாதானத்தின் தேவனே, என்னுள்ளத்தில் கசப்பான வித்துக்க ளுக்கு இடங்கொடுத்து, முறுமுறுப்பினாலே என் இருதயத்தை கெடுத்துக் கொள்ளாதபடிக்கு என்னை காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலி 2:15-16