புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 13, 2022)

நல்ல பொக்கிஷம்

லூக்கா 6:45

நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்


ஒரு ஊரின் மத்திய பகுதியிலே இருந்த தண்ணீர் தாங்கியிலிருந்து, அந்த ஊர் மக்களுக்கு தண்ணீரானது விநியோகம் செய்யப்பட்டு வந் தது. அந்த தண்ணீர் தாங்கிக்குள் இருக்கும் தண்ணீர் மாசுபடுத்தப்படாத படிக்கு, அதை இரவும் பகலும் காவல் செய்து பராமரித்து வந்தார்கள். அதனால் அந்தத் தாங்கியிலிருந்து விநியோகிகப்படும் தண்ணீர், குடிப்பதற்கு மிகவும் உகந்த சுத்தமான தண்ணீராக இருந்தது. ஆனால் அந்த தாங்கிக்குள் அசுத்தமான ஒரு பொருள் விழுந்து விடும் என்றால், அதிலிருந்து அந்த ஊர் மக்களுக்கு விநியோகிக்க ப்படும் தண்ணீர் மாசுபடுத்தப்பட்டதா கவே இருக்கும். அந்தத் தண்ணீர் தாங் கியிலிருந்து நல்ல தண்ணீர் விநி யோ கிக்கப்பட்டது போல, நம் இருதயமானது ஜீவ ஊற்றை பிறப்பிக்கும் இடமாக இருக்க வேண்டும் என்றால், நம் இருதயமானது மாசுபடுத்த ப்படாமல் காக்கப்படல் வேண்டும். இருதயத்திலிருந்து பொல்லாத சிந்த னைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். களவானது கைகளினாலே ஆரம்பிக்கப்படுவதில்லை மாறாக அது மனிதனுடைய உள்ள ந்திரியத் தின் ஆழத்திலுள்ள துர்குணத்திலே உருவேற்றப்படுகின்றது. மோகபா வமானது சரீரத்தினால் செயற்படுத்தப்பட முன்பு, முதலாவதாக இரு யத்தின் ஆழத்திலே உண்டாகும் சிற்றின்பத்திலே ஆரம்பிக்கப்பட்டது. 'அவன் நல்ல மனமுடையவன் ஆனால் அவனுடைய வாய்தான் கொஞ் சம் சரியில்லை' என்று மனிதர்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிரு ந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதய மாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட் டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும் என்று நம் ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். பிரியமானவர்களே, மீட்ப ராகிய இயேசுவின் பாடுகளை அதிகமாக தியானிக்கும் இந்த பரிசுத்த வாரத்திலே, நாம் அவரைப் போல மாறவேண்டும் என்பதற்காக அவர் நம் பாடுகளை தம்மேல் ஏற்றுக் கொண்டார் என்பதை குறித்து தியானம் செய் யுங்கள். நம் இருதயமானது ஜீவ ஊற்று ஊரும் இடமாகவும், விலை யேறப்பெற்ற பொக்கிஷமாகவும் இருக்க வேண்டும் என்பதையே ஆண் டவராகிய இயேசு விரும்புகின்றார். எனவே இந் நாட்களிலே உங்கள் வாழ் க்கையிலே நல்ல தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுங்கள்;.

ஜெபம்:

உன்னதமான தேவனே, என் இருதயம் திவ்விய சுபாவங்கள் நிறைந்த பொக்கிஷமாக இருக்கும்படிக்கு, தவறான எண்ணங்கள் என்னை மேற்கொள்ளாதபடிக்கும், உம்முடைய வார்த்தையின் வழியிலே வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:21