புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 12, 2022)

என் இருதயத்தின் நிலைமை

நீதிமொழிகள் 4:23

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.


ஒரு விவசாயியானான் தன்னுடைய சிறிய தோட்டத்தை சுற்றி வேலிய டைத்து, அதிலே பலன் தரும் பயிர்வகைகளின் விதைகளை விதைத்து, தோட்டத்தை நன்றாக பராமரித்து வந்தான். நிலத்தை பண்படுத்தும் நாளிலிருந்து அறுவடையின் நாள் வரைக்கும், அந்த விவசாயியா னவன், தன் தோட்டத்தை தினமும் பாதுகாத்து, பராமரித்து வந்தான். பாதுகாத்து பராமரிப்பதென்பது இல குவான காரியமல்ல, அளவான சூரிய வெளிச்சமும் வெப்பமும் பயிர்க ளின் பருவத்திற்கேற்றபடி பேண ப்ப ட்டு, போதியளவு நீர் பாய்ச் சப்பட வேண்டும். ஏற்ற பசளைகள் போட்டு, களைகளையோ மிகவும் கவனமாக அகற்றல் வேண்டும். கிராமத்திலுள்ள சிறு விலங்குகள், பிராணிகள், பறவைகளிடமிருந்தும் பயிர்கள் பாது காக்கப்பட வேண்டும். எனவே விவசாயியானவன், தன் தோட்டத்தை பராமரிப்பதற்கு அதிகமாகவே பிரயாசப்பட வேண்டும். இப்படியாக தன் தோட்டத்திலுள்ள பயிர்களையே பாதுகாக்க நேரமில்லாமல் இருக்கும் அவன், தானே தன் தோட்டத்திலே களைகளை விதைத்து, வேலியின் ஒரு பகுதியை திறந்து விடுவானாக இருந்தால், அவனை பார்க்கும் ஊரார் என்ன சொல்லார்கள்? தன் பிரயாசத்தை தானே கெடுத்துக் கொள் ளும் மதியீனன் என்று சொல்வார்கள் அல்லவா? ஆம், பிரியமானவ ர்களே, நம்முடைய இருதயமும் அந்த தோட்டத்திற்கு ஒப்பானதாகவே இருக்கின்றது. அதிலே ஆண்டவராகிய இயேசுவின் ஜீவ வார்த்தைக ளாகிய விதை விழுந்து, முளைத்து, பலன் தரும்படியாக, பண்படுத்தப் பட்டு, எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ளப்படல் வேண்டும். நம் முடைய ஆண்டவரா கிய இயேசுவே ஜீவ ஒளியாகவும், ஜீவ தண்ணீர hகவும், ஜீவ உணவாகவும் இருக்கின்றார் (யோவான் 4:14, 6:35, 8:12). மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகார ங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. அதற்கு மேலாக, நாமே நம்முடைய இருதயங்க ளிலே களைகளாகிய பாவத்தின் வித்துக்களை விதைத்து, மாம்சத்திற் குரிய சுபாவங்களின் எண்ணங்களை வளரவிடுவோமாக இருந்தால், நம் வாழ்வின் நற்கனிகளை நாம் காணமுடியாமல், இருதயத்தை கேடான காரியங்கள் தங்கி வளர்வதற்காக இடம் கொடுக்கின்றவர்களாயிருப் போம். எனவே, நாம் இருதயத்தை கருததோடு காத்துக் கொள்வோமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகத்திலே எனக்கிருக்கும் போராட்ட ங்களோடு மேலதிகமான வேதனைகளை நானே கூட்டிக் கொள்ளாமல், இருதயத்தை தூய்மையாக காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - லூக்கா 6:45