புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 10, 2022)

மன நிறைவோடு பணி செய்யுங்கள்

மத்தேயு 16:23

தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.


ஒரு ஊரிலே, தன் எஜமானனானவனுக்கு விசுவாசமுள்ள ஒரு வேலைக் காரன் இருந்தான். அந்த ஊரிலுள்ள வீணரான சில மனுஷர், தன் எஜ மானனுக்கு விரோதமாக சொல்லிய வார்த்தைகளை அவனது வேலைக் காரன் கேட்ட போது, அவன் கோபம் மூண்டவனாய், அந்த வீணரான மனுஷரை நோக்கி: நான் உயிரோடிருக்கும் வரைக்கும், நீங்கள் என் எஜமானனுக்கோ, அவனுடைய குடும்பத்திற்கோ எதையும் செய்ய விட மாட்டான் என்று மனதார சபதமிட் டான். அந்த வேலைக காரனுடைய கொள்கையானது யாவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல அறிகையாக இருந்தது. மீட்பராகிய இயேசுதாமே, இந்த உலகத்திலே இருந்த நாட்க ளிலே, தான் வந்த நோக்கத்தை குறி த்து தம் முடைய சீஷர்களுக்கு போதி க்கத் தொடங்கினார். அதன்படிக்கு, தான் பலபாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபார கரா லும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாளை க்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதி க்கத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்து க்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உம க்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கி னான். அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாக ப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்ற வைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கி றாய் என்றார். ஆம், பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசுவின் முதன்மை யான சீஷனாகிய பேதுரு, தன்னுடைய எஜமானனுக்கு விரோதமாக யாரும் எதையும் செய்யக் கூடாது என்ற கொள்கையுடையவனாக இருந்தான். அந்தக் கொள்கையை உலகிலுள்ளவர்கள் யாவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் பிதாவாகிய தேவனுடைய அநாதி தீர்மானத் தின்படி, மீட்பர் இயேசு மனித குலத்தின் பாவங்களுக்கு பரிகாரம் செலுத்தும் படியாக தம்தைத்தாம் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கும்படி க்கு இந்த உலகிற்கு வந்தார் என்பதை அறியாதிருந்தான். கருப்பொரு ளாவது, மனிதர்களுக்கு நன்மையாக தோன்றும் கொள்கைகள் சில வேளைகளிலே தேவனுடைய சித்தத்திற்கு முரணானவைகளாகவும், பிசாசனவனுக்குரியதாகவும் இருக்கலாம். எனவே, தேவனுக்குரியவை களை நாம் சிந்தித்து, அவைகள் நிறைவேற இடங் கொடுக்கும்படியாக, நம்முடைய கொள்கைகள் யாவையும் விட்டு விடுவோமாக.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, உமக்கேற்றவைகளை நான் சிந்திக்கும்படி யாக, என் கொள்கைகளை விட்டுவிட்டு, தேவ ஆவியானவரின் வழிநட த்துதலுக்கு இடங் கொடுக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:9-13