புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 09, 2022)

தேவ சித்ததிற்கு முரணான கொள்கைகள்

மாற்கு 14:9

இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும்


நம் வாழ்விலே இருக்கும் நல்ல கொள்கைகளை வைத்துக் கொண்டு, மிகுதியானவற்றைவிட்டு விடுவோம் என்று மனிதர்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். அதுவும் மனிதனுடைய ஒரு கொள்கையாக இருக் கின்றது. சில தேவ பிள்ளைகளுடைய வாழ்விலும் கூட இவ்வண்ணமா கவே சில நன்மையாக தோன்றும் சில கொள்கை கோட்பாடுகளை வைத்திருக்கின்றாரகள்;. எனவே, நாம் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக் கொண்ட நாள் முதற்கொண்டு, நம்முடைய கொள்கைகள் யாவையும், முற்றாக அகற்றிவிட்டு, ஆண்டவர் இயேசு சொல்லிய வார்த்களை கேட்டு, அவைகளை செய்கின்றவர்களாக நம் மை ஒப்புக் கொடுப்பதே புத்தியுள்ள காரியமாக இருக்கின்றது. சில வேளை களிலே, நம்முடைய கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள் நன்மை யானதாக நமக்கு தோன்றலாம்;, ஆனால் சில வேளைகளிலே அவை பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்கு விரோ தமான கொள்கைகளாக மாறிவிடலாம். இப்படியாக, ஆண்டவர் இயே சுவை அறிந்த பின்பும், தங்கள் கொள்கைகளை விட்டு விடாதவர்கள், அதனால் தங்கள் வாழ்விலே பல நோவுகளை ஏற்படுத்தி விடுகின் றார்கள். பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவிலே அவரு க்கு இராவிருந்து பண்ணினார்கள்;. அப்பொழுது லாசருவின் சகோத ரியாகிய மரியாள் விலையேறப்பெற்ற களங்கமி ல்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங் களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத்துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. அப் பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க ப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். தரித்திரருக்கு உதவி செய்யும் யூதாஸ்காரியோத்தின் கொள்கை நன்மையானதாக தோன்றிய போதும், இயேசு அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, மரியாள், இயேசுவின் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள் என்பதை அவன் அறியாதி ருந்தான். அதுபோல நாமும் பிதாவாகிய தேவனின் திருச்சித்தத்திற்கு விரோதமானவைகளை சிந்திக்காதபடிக்கு தேவ ஆவியானவரின் வழி நடத்துதலுக்கு நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, என்னுடைய சுயபுத்தியின் மேல் சாயாமல், சத்திய ஆவியானவர் சகலவற்றிலும் என்னை வழிநடத்திச் செல்லும்படியாக ஒப்புக் கொடுக்கின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 12:1-8