புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 08, 2022)

கொள்கையும் கோட்பாடும்

யோவான் 14:7

ஆண்டவர் இயேசு: என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.


எரேமியா என்னும் தேவ பக்தனுடைய நாட்களிலே, ரேகாபியர் என்னும் சந்ததியார் இருந்தார்கள். அவர்களுடைய தகப்பனார் அவர்களுக்கு கூறிய அறிவுரையாவது: நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும்படிக்கு, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றை க்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக் கட்டாமலும், விதையை விதை யாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று கூறியிருந்தார். அந்த சந்ததி யார் தங்கள் தகப்பனார் கூறிய அறி வுரைக்கு செவி கொடுத்து, இந்தப் பூமி நிரந்தரமானதல்ல என்ற கொள் கையின்படி பரதேசிகளாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய கொள்கை கோட்பாடுகள் நன்மையாக தெரிந்திருந்தாலும், அவர்களுடைய தகப்பனானவருடைய கொள்கை கோட்பாட்டினால் மட்டும் ஒருவரும் பரம தேசமாகிய பரலோகத்திற்கு சென்றுவிட முடியாது. இவ்வண்ணமாக, இந்த உலகிலே அநேக ஜன ங்கள், மனிதர்களால் வகுக்கப்பட்டதும், உணர்வுளை துண்டிவிடும் தத்து வங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் அடிப்படையிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். அந்த கொள்கை கோட்பாடுகள் துன்மார்கத்திற்குரிய வைகள் அல்ல. அவைகளிலே அநேகமானவைகள் நல்வழிக்குரியவை களாக இருக்கின்றது. எனினும், அந்த கொள்கைளும், கோட்பாடுகளும் தேவனுடைய வார்த்தைக்கு உட்பட்டவைகளாக இருக்காவிட்டால், அவை களினாலே மனிதர்களுக்கு உண்டாகும் பலன் அற்பமானதும், இந்த உல கத்திற்குரியதாகவும் மட்டுமே இருக்கும். மனிதர்களுடைய கொள்கை களும் கோட்பாடுகளும் அவர்களுக்கு நித்திய ஜீவனை பெற்றுக் கொடு க்க முடியாது. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்கள் மட்டுமே பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும். தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். அதாவது, தம்முடைய குமாரனாகிய இயேசு வழியாக மனித குலம் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே அவருடைய திருச்சித்தம். எனவே நாம் ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து, அவரை எங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய வார்த்தையிலே நிலைத்திருக்கின்றவர்களாக வாழககடவோம்.

ஜெபம்:

பரலோக தேவனே, வழியும் சத்தியமும் ஜீவனுமாகயிருக்கின்ற ஆண்டவர் இயேசுவை பற்றிக் கொண்டு, அவருடைய வார்த்தைகளின்படி நற்கிரியைகளை செய்கின்றவர்களாயிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 146:1-5