புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 07, 2022)

தேவனுக்கு பிரியமான ஜெபம்

சங்கீதம் 19:14

என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.


அக்காலத்திலே, தேவனால் அழைக்கப்பட்டவர்களில், தேவனுக்கு பய ந்து அவர் வழிகளிலே வாழ்ந்தவர்கள், தேவனுக்கு உகந்த பலிகளோடு ஆலய பிரகாரத்திற்குள் சென்றார்கள். தங்கள் இக்கட்டில் அவர்கள் தங்கள் உதடுகளைத் திறந்து, தங்கள் வாயினால் சொல்லிய தங்கள் பொருத்தனைகளை தேவனுக்கு செலுத்தி வந்தார்கள். இப்படியாக தேவனுக்கு உகந்த பலிகளையும், பொருத்தனைகளையும் செலுத்திய மனிதனொருவன் கூறும் அறிவுரையைப் பற்றி இன்று சிந்தனைக்கு நாம் எடுத்துக் கொள்வோம்;. அந்த தேவ பக்தனானவர் தன் அனுபவத்தைக் கூறுகையில்: 'தேவனுக்குப் பயந்த வர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமா வுக் குச் செய்ததைச் சொல்லுவேன். அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார். என் இருதயத்தில் அக் கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். மெய்யாய் தேவன் எனக்குச் செவி கொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.' என்றார். அதாவது, பலிகளும், பொருத்தனைகளும் நல்லது ஆனால் அவைகள் மட்டும் போதாது. அதற்கு முன்னதாக நம்முடைய இருதயத்தில் இருப்பவை கள் தேவனுக்கு ஏற்புடையவைகளாக இருக்க வேண்டும். முதலாவ தாக நம்முடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை இருக்குமாயின் நாம் அதை முற்றாக அகற்றிவிட வேண்டும். அதாவது, தேவனாகிய கர்த்தரு டைய நீதியையும் அவர் கொடுத்திருக்கும் நியமங்களiயும், மனமாரத் திட்டமிட்டு புரட்டிப் போடும் நமது உள்ளான சுபாவமானது அக்கிரம சிந்தையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட சிந்தையுள்ளவர்கள் எந்த துணிகரமான பாவங்களையும் நிறைவேற்றக்கூடிய தன்மையுள்ளவர்கள். அப்படிப்பட்ட சிந்தையுள்ள இருதயத்திலே இருந்து புறப்படுகின்ற எந்த பலிக ளும் தேவனுக்கு உகந்த வாசனையாக இருக்கப்போவதில்லை. நாம் தேவ சமுகத்திலே பொருத்தனைகளை செய்வது, உபவாசிப்பது, தரித்திருந்து ஜெபிப்பது நல்லது ஆனால், நம் உதடுகளினாலே நாம் ஏறெடுக்கும் ஸ்தோத்திரப்பலிகள், நாம் செய்யும் விண்ணப்பங்கள், வேண்டுதல்கள் தேவனுடைய சமுகத்திலே ஏற்புடையதாக இருக்க வேண்டுமென்றால், நம்முடைய இருதயத்தின் தியானங்களும், வாயின் வார்த்தைகளும் அவருக்குப் பிரியமானதாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

என்மீது அன்புகூர்ந்து என்னை அழைத்த தேவனே, வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, உம்முடைய நித்திய வழியிலே என்னை நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்; 139:23-24