புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 06, 2022)

பிரியமான பிள்ளைகள்

சங்கீதம் 62:8

ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்;


ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். இருவரும் தாங்கள் பெற்றோருடன் வசித்து வந்த கிராமத்தைவிட்டு, அந்தத் தேசத்திலுள்ள வௌ;வேறு ஊர்களிலே தங்கள் தங்கள் சொந்தக் குடும்பத்தோடு குடி யேறியிருந்தார்கள். மூத்தவன் தன் கைகளின் பிரயாசத்தினால், நாள் தோறும் கிடைக்கும் கூலிப் பணத்திலே தன் குடும்பத்தின் தேவைகளை கவ னித்து வந்தான். இளையவனோ, பட் டணமொன்றில் இருக்கும் கம்பனி யொன்றிலே, பெரும் உத்தியோக த்தை செய்து வந்தான். அவன் ஐசுவ ரியமுள்ளவனும், அந்த பட்டணத்தின் அதிகாரிகள் மத்தியிலே செல்வாக்கு ள்ளவனுமாய் இருந்தான். பெற்றோ ரின் வாழ்க்கையிலே விசேஷpத்த நாட் கள் வரும் போது, அவர்களுக்கு திர ளான வெகுமதிகளை அனுப்பிவைப் பது இளையவனுக்கு வழக்கமாயிருந்தது. ஆனால், அவர்களை நேரிலே சென்று பார்ப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. அவன் அநேக அலுவல் கள் உள்ள மனிதனாக இருந்தான். ஆனால், நாள் கூலியிலே தன் குடு ம்பத்தை நடத்தி வந்த மூத்தவனோ, பெற்றோரின் விசேஷpத்த நாட்கள் வரும்போது, முன்கூட்டியே திட்டமிட்டு, தன் குடும்ப சகிதம், பெற்றோரின் ஊருக்குச் சென்று, அங்கே அவர்களுடன் இரண்டொரு நாளை கழிப்பது அவனுடைய விருப்;பமாக இருந்தது. இந்த சம்பவத்தை சற்று சிந்தித் துப் பாருங்கள். இவர்கள் உங்கள் குமாரர்களாக இருந்தால், நீங்கள் யாருடைய போக்கிலே பிரியமாக இருப்பீர்கள்? பிரியமானவர்களே, இன்று சில மனிதர்கள், அந்த இளைய குமாரனைப்போல, தேவனாகிய கர்த்தருக்கு வெகுமதிகளையும், காணிக்கைகளையும் அனுப்பி வைக்கி ன்றார்கள். ஆனால், அவர்கள் மனதோ அவரைவிட்டு தூரமாகவும், இந்த பூமியையோ ஒட்டிக் கொண்டிருக்கின்றது. ஒருவனுக்கு எவ்வளவு உயர்ந்த கல்வியும், உலக ஆஸ்திகளும், செல்வாக்குகளும் இருந்தா லும், தேவனோடு உறவாட நேரம் இல்லையென்றால், அதன் முடிவு அவன் ஆத்து மாவுக்கு நஷ;டமாகவே இருக்கும். இந்த உலகிலே மேன் மக்களாக இருந்தாலும், கீழ்மக்களாக கருதப்பட்டாலும், தேவ சமுக த்தை நாடித் தேடாத மனிதர்களின் வாழ்வின் நிலையானது பொய்யும் மாயையுமே. ஒரு புகையைப் போல அவர்கள் கடந்து போவார்கள். நீங்களோ, எந்நிலையில் இருந்தாலும், தேவ சமுகத்தை நித்தமும் தேடு ங்கள். அவரே நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.

ஜெபம்:

என்னை தெரிந்து கொண்ட தேவனே, நான் உம்மில் நிலைத்திருந்து கனிகொடுக்கும் வாழ்க்கை வாழும்படிக்கு, உம் உறவிலே நாள்தோறும் வளர்ந்து பெருக கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - சங்கீதம் 105:4