புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 05, 2022)

மன வாஞ்சை

ஓசியா 6:6

பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.


இந்த உலகத்திலே வாழும் பலர் தேவனுக்கு ஆராதனை செலுத்தி வருகின்றார்கள். ஆனால் அவர்கள் எல்லாருடைய ஆராதனையும் தேவ னுக்கு உகந்த பலியாக அமைந்து விடுமோ? ஆபேல் என்ற மனிதனா வன் தேவனுக்கு உகந்த காணிக்கையைக் கொடுத்தான். தேவனானவர் அதை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார். ஆனால் அவன் சகோதரனான காயீனும் பலிகளைச் செலுத்திய போது, அது தேவனுக்கு உகந்த பலி யாக இருக்கவில்லை. ஏனெனில், இரு தயங்களை ஆராய்ந்தறிக்கின்ற தேவ ன்தாமே, மனிதனுடைய உள்ளான நோக்கங்களை அறிந்திருக்கின்றார். எனவே நாம் செலுத்தும் ஆராத னையும், காணிக்கைகளும் தேவனு க்கு உகந்ததாக இருக்கும்படிக்கு, நம்முடைய இருதயமும், அதன் தியானங்களும் தேவனுக்கு ஏற்பு டையதாக இருக்க வேண்டும். ஒரு சமயம், ஆண்டவர் இயேசு தேவா லயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து கொண்டிருக்கும் போது, கண் ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார். அதாவது, இது போடப்பட்ட காணிக்கையை குறித்ததல்ல, அதை போடுகின்றவர்களின் மனநிலையையும் அவர்கள் தேவன்மேல் கொண்டுள்ள வாஞ்சையையும் குறித்ததாக இருக்கின்றது. பிரியமானவர்களே, நாம் யாவரும் தேவனை அறிகின்ற அறிவிலே நாள்தோறும் வளர்ந்து மறுரூபமாக வேண்டும். சில வேளைகளிலே தவறுகள் நம் வாழ்க்கையிலே நடைபெறலாம். எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாத வராயிருக்கிற பிரதான ஆசாரியராகிய இயேசு நமக்கிருக்கிறார். எனவே நாம் தேவனுடைய வார்த்தையை கேட்கும் போது, முரட்டாட்டம் பண் ணாமல், அதற்கு கீழ்படிந்து அவைகளை அறிக்கை பண்ணி விட்டு விட்டு, செம்மையான உள்ளத்தோடு, தேவனுக்கு ஏறெடுக்கும் பலியிலே அவர் பிரியப்படுகின்றவராயிருக்கின்றார்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, என் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலிகள் உமக்கு ஏற்புடையதாக இருக்கும்படிக்கு உமக்குப் பிரியமானதை செய்ய எனக்கு கற்றுத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 சாமு 15:22

Category Tags: