புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 04, 2022)

பரலோக பொக்கிஷத்தை உடையவர்கள்

நீதிமொழிகள் 3:6

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.


தேவனை சேவிப்பதென்பது வாழ்க்கையின் ஒரு பகுதியல்ல. மாறாக, நம்முடைய வாழ்க்கையானது தேவனை சேவிக்கின்றதாக இருக்க வேண் டும். ஜீவனுள்ள தேவன் கைகளால் கட்டப்பட்ட ஆலய கட்டிடத்திலும், மனிதர்களுடைய கைவேலையாகிய விக்கிரகங்கள், சொரூபங்கள், சித் திரங்கள் போன்றவற்றிலும்; வாசம் செய்கின்றவர் அல்லர். நாமே, ஜீவ னுள்ள தேவன் தங்கும் ஆலயமாக இருக்கின்றோம். எனவே, தேவாதி தேவனை ஆலய வளாகத்திற் குள் விட்டுவிட்டு வரும் எண் ணத்தை முற்றிலு மாய் உங்க ளைவிட்டு அகற்றி விடுங்கள். நீங்கள் பாடசாலைக்கு சென் றாலும் அவர் உங்களுக்குள் வாசம் செய்கின்றார். நீங்கள் வேலைக்கு சென்றாலும் அவர் உங்களுக்குள் வாசமாக இருக் கின்றார். நீங்கள் வீட்டிலோ, வெளியிலோ, விருந்து சாலையிலோ, திரை ப்பட அரங்கிலோ, சந்தை வெளிகளிலோ, உல்லாசப் பயண விடுதிக ளிலோ, எந்த இடத்திலிருந்தாலும், ஜீவனுள்ள தேவன் நமக்குள் வாசம் செய்கின்றார் என்பதை மறந்து விடாதிருங்கள். இருளிலிருந்து வெளிச் சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்தி லுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். இந்த மகத்துவ முள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக் கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். அதாவது, அற்பமான நமக்குள் ஆச்சரியமான பர லோக பொக்கிஷத்தை கொடுத்திருக்கின்றார். எனவே, நம்முடைய எல்லாக் கிரியைகளும் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண் டும். நாம் நமக்குள் வாசம் செய்கின்ற தேவனுடைய ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். நம்முடைய கல்வியோ, தொழி லோ, வேறெந்த பொழுது போக்கோ எல்லாமே தேவனுடைய திட்டத் திற்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டும். இந்த உலகத்தின் காரியங் கள் நம்மை கட்டுப்படுத்த ஆரம்பிக்கும் போது, நாம் அந்த உலக காரியங் களை சேவிக்கின்றவர்களாக மாறிவிடுவோம். ஆதலால், நீங்கள் எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நம்மை வழிநடத்தும் தேவ ஆவியானவரின் சத்தத்திற்கு முழுமையாக உங்களை அர்ப்பணி யுங்கள்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மிடத்தில் அன்புகூர்ந்து, உம்முடைய வழிகளிலெல்லாம் நடந்து, உம்மை பற்றிக்கொண்டு வாழும் வாழ்வின் மேன்மையை உணர்ந்து கொள்ளும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 11:19-21