புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 03, 2022)

கருத்துள்ள உறவு

1 நாளாகமம் 16:11

கர்த்தரையும் அவர் வல்லமை யையும் நாடுங்கள்; அவர் சமு கத்தை நித்தமும் தேடுங்கள்.


முதியோர் பராமரிப்பு நிலையத்திலே அனுமதிக்கப்பட்ட தகப்பனா னவரை, வாரந்தோறும் சில மணித்தியாலங்கள் சந்திப்பது, மகனான வனுடைய வழக்கமாக இருந்தது. தவறாமல், அவன் குறித்த நேரத் திற்கு சென்று தன் தகப்பனானவருடைய அறையிலே இருந்து, அவ ருடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு, மிகுதியான நேரம் முழுவதும், தன் கைத் தொலைபேசியில், தன் நண் பர்களுடன் சம்பாஷpத்து கொண் டிருப்பான். இதை சில மாதங் களாக அவதானித்து வந்த தகப் பனானவர், அவனை நோக்கி: மகனே, நீ எதற்காக இவ்வளவு நேரத்தை இங்கே விரயமாக்குகி ன்றாய், நீ போய் நீ செய்ய வேண்டிய அலுவல்களை பார்ப்பது உன க்கு பிரயோஜனமாக இருக்கும் என்று கூறினார். அந்த மகனானவனுக்கு தகப்பனானரைக் குறித்த கடமையுணர்வு இருந்த போதிலும், தகப்பனா னவரோடுள்ள உறவில் விரிசல் உண்டாகி, தணிந்து போயிருந்தது. பிரியமானவர்களே, இந்த சம்பவத்தை மையமாக வைத்து, நம்முடைய பரம பிதாவுடனான, நம் உறவு எப்படிப்பட்டதாக இருக்கின்றது என நாம் அவ்வப்போது ஆராய்ந்து பாரக்க வேண்டும். நான் ஏன் ஆலயத்திற்கு போகின்றேன்? அது வெறும் வழக்கமாக மாறிவிட்டதா? என்னுடைய தனிப்பட்ட ஜெப நேரம் ஒரு கடமைக்கு செய்யும் சடங்காச்சாரமாக இருக்கின்றதா? நாம் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ள தேவன். அவர் நம்மோடு இடைப்படுகின்றவராயிருக்கின்றார். பல வழிகளிலே நம்மோடு பேசுகின்றார். நாம் செய்ய வேண்டியவைகளைக் கற்றுக் கொடுக்கின் றார். நாம் தவறான பாதையிலே செல்லும் போது அதை உணர்த்துகின்றார். இப்படியாக, நாம் நம்முடைய பிதாவாகிய தேவனோடு கொண்டுள்ள உறவு ஜீவனுள்ளதாக இருக்க வேண்டும். ஆலயத்திற்கு வந்தேன், இரண்டு மணி நேரம் இருந்தேன், இனி என் வழமையான வாழ்க்கைக்கு திரும்பி விடுவேன் என்ற வாழ்க்கையானது, பிரயோஜனமற்றது, மரித் துப்போன உறவுள்ளதாகவுமே இருக்கும். உண்மையாய் தம்மை தேடு கின்ற யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் சமீபமாக இருக்கின்றார். எனவே, நீங்கள் தேவனோடு கொண்டுள்ள உறவைக் குறித்து சிந்தி த்துப் பாருங்கள். அவருடைய சமுகத்தை வாஞ்சையோடு நாடித் தேடு ங்கள். உங்கள் இருதயத்தை தேவனிடத்தில் கொடுங்கள். கருத்தோடு அவரை சேவியுங்கள். கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

ஜெபம்:

இருக்கும் தேவனே, நான் உம்மோடு கொண்டுள்ள உறவு கருத்துள்ளதாக இருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எரேமியா 29:11