புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 02, 2022)

வாழ்வின் கருப்பொருள் என்ன?

பிரசங்கி 12:13

காரியத்தின் கடைத் தொகை யைக் கேட்போமாகஇ தேவனு க்குப் பயந்துஇ அவர் கற்பனை களைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கட மை இதுவே


உண்கின்ற நாட்களிலே உண்ண வேண்டும், உடுத்தக் கூடிய வயதிலே உடுத்த வேண்டும், உல்லாசமாக இருக்க வேண்டிய காலத்திலே உல் லாசமாக இருக்க வேண்டும் என்று தன் நண்பர்கள் கூறிய தத்து வங்களும், மகனே, உன் வழிகளை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவரு டைய வசனத்தின்படி உன்னைக் காத்துக்கொள் என்று தன் தந்தை யார் கூறிய போதனையும் ஒரு மனி தனானவனின் காதுகளிலே ஒலித் துக் கொண்டிருந்தது. தற்போது அவனுக்கு தத்துவங்களை கூறிய நண்பர்கள் அவனோடு இல்லை. நல்ல வழியை போதித்த தந்தை யானவரும் இப் பூவுலகைவிட்டு கட ந்து சென்று விட்டார். இப்போது வயோதிப நாட்களை கடந்து கொண் டிருக்கும் அவன், தன் எண்ணங்களுக்கு இனிமையாக இருந்த தன் நண்பர்களின் உலக தத்துவங்களை பின்பற்றி வாழ்ந்ததால், தனக்கும் தன் குடும்;பத்திற்கும் ஏற்பட்ட பாதகமான பின்விளைவுகளைக் குறித்து மிகவும் மனம் வருந்தினான். பிரியமான சகோதர சகோதரிகளே, இந் நாட்களிலே, சில தேவ பிள்ளைகளின்; எண்ணங்களில் அந்த மனிதனாவ னுடைய நண்பர்கள், அவனுடைய இளவயதிலே கூறிய தத்துவங்க ளால் நிறைந்திருக்கின்றது. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதிலே அனுபவிக்க வேண்டும். பிற்காலத்திலே மிகுதியானவைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று தேவ பக்திக்குரியவைகளை தங்கள் வாழ்விலும், தங்கள் பிள்ளைகளின் வாழ்விலும் பின் போடுகின்றார்கள். நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ;டிகரை நினை. தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல் லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும், சூரியனும், வெளிச்சமும், சந்திர னும், நட்சத்திரங்களும், உன் வாழ்விலே அந்தகாரப்படாததற்குமுன்னும் உன் வாலிபப்பிராயத்திலே அவரை நினை என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. அதாவது, நீங்கள் எந்த வயதுடையவர்களாக இருந்தா லும், நாளை அல்லது பின்னர் என்று தேவ பக்திக்குரியவைகளை பின் போடாமலும், மாம்சத்தின் எண்ணகளுக்கு உங்கள் சரீரங்களை பயிற்று விக்காமலும், தேவனுடைய வார்த்தைகளின்படி உங்கள் வாழ்வை இப் போதே அமைத்துக் கொள்ளுங்கள். நீடிய பொறு மையானது, கிரி யைகள் வழியாக எம்மில் வெளிப்பட வேண்டும்;.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படி என்னை அழைத்த தேவனே, இந்த உலகத்தினால் ஞானம் என்று பெயர்பெற்றிருக்கின்ற தத்துவங்களால் என்னை கெடுத்துக் கொள்ளாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 22:6