புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 01, 2022)

ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி

யோவான் 6:63

நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.


பட்டணத்திலே படித்துக் கொண்டிருந்த ஒரு வாலிபனானவன், தன் விடு முறை நாட்களை கழிக்கும்படி, தன் பெற்றோர் வசிக்கும் கிராமத்திற்கு திரும்பினான். அந்நாட்களிலே, அவன் தன் பெற்றோரை சந்திக்க வந்த மருத்துவரொருவரோடு பேசிக்கொண்டிருந்தான். அந்த வேளையிலே, பட் டணத்திலே இருக்கும் சுவையானவும், தனக்கு பிடித்ததுமான உணவு வகைகளை குறித்துக் கூறிய போது, தன் கிராமத்திலுள்ள தன க்கு பிடிக்காத பல உணவு வகை களைப் பற்றியும் கூறினான். அந்த மருத்துவர், வாலிபனை நோக்கி: தம்பி, வாய்க்குச் சுவையானதும், பார்வைக்கு வசீகரமானதெல்லாம் வயிற்றுக்கு உகந்ததல்ல. இந்த உலகிலுள்ள மனிதர்கள், தங்கள் வாய்க்கு மிகவும் சுவையானவைகளையும் கண்களுக்கு இன்பமாக இருக் கும் உணவுப் பண்டங்களையும் அதிக விலை கொடுத்து வாங்கத் தாயராக இருக்கின்றார்கள். ஆனால், அவைகளினாலே அவர்கள் தமது ஆரோக்கியத்திற்கு வரவிருக்கும் பாதகமான பின்விளைவுகளை பற்றி சிந்திப்பதில்லை. எனவே, நீ இவைகளை சற்றுச் சிந்தித்து உன் ஆரோ க்கியத்தை கவனித்து கொள் என்று அறிவுரை கூறினார். பிரியமானவ ர்களே, மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து, நம் முடைய உள்ளான மனிதனுக்குரிய ஆன்மீக போஜனத்தைக் குறித்து இந்நாட்களிலே தியானம் செய்வோம். தேவனுடைய ஜீவ வசனங்களே, ஆரோக்கியமுள்ள ஆன்மீக போஜனமாக இருக்கின்றது. ஆனால் இன்று பல மனிதர்கள், கேட்பதற்கு தங்கள் செவிகளுக்கு இனிமை யான வார்த்தைகளையும், தங்கள் மாம்ச எண்ணங்களை நிறைவேற்று வதற்கு தடையில்லாத வேத போதனைகளையும், இந்த உலக அறிவு க்கு ஏற்புடையதும், மனிதர்களால் அங்கீகாரம் பெற்றதும், தங்கள் அறி விக்கு யதார்த்தமுள்ளதுமான போதனைகளையே கேட்க விரும்புகின் றார்கள். அதனால் தங்கள் ஆன்மீக வாழ்விற்கு வரக்கூடிய பாதகமான பின்விளைவுகளைக் குறித்து சற்றும் சிந்திப்பதில்லை. நம் வாழ்வில் சில சந்தர்ப்பங்களிலே, தேவனுடைய வசனங்களும், ஞாயிறு வேத போதனைளும், நம் செவிகளுக்கு கசப்புள்ளதாகவும், இருதயத்தை குத் துகின்றதாகவும் இருக்கும். அவை நம்மை சீர்திருத்தி நித்திய வாழ் வின் வழியில் நடத்துகின்றதாயும் இருக்கின்றது. நம்மை சீர்திருத்தி நடத்தும் சத்தியமும் ஜீவனுமுள்ளதுமான தேவனுடைய வார்த்தைக ளைக் கேட்டு, கீழ்படிந்து, அவைகளை நாம் கைக்கொள்வோமா.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்காக என்னை அழைத்தவரே, உம்முடைய சித்தம் என்ன என்பதை போதிக்கும் உம்முடைய ஜீவ வசனங்களைக் கேட்டு, அவைகளை நான் கைகொள்ளும்படி பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:17