புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 31, 2022)

கிரியைகளுக்கு தக்க பலன் உண்டு

ரோமர் 9:20

மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்?


தேவன் இருந்தால் இவையெல்லாம் இப்படி நடக்குமா? முதியவர்கள் படும்பாட்டை பாருங்கள், குழந்தைகளின் நிலைமைகளை பாருங்கள் என்று சில மனிதர்கள் தங்கள் மனவேதனையிலும், வேறு சிலர் அறியாமையிலும், இன்னும் சிலர் மனக்கடினத்தினாலும் கூறிக் கொள்கி ன்றார்கள். நாம் ஆராதிக்கின்ற தேவனாகிய கர்த்தருடைய திவ்விய அன்பை இந்த உலகத்திலுள்ள வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அவர் ஒப்பற்ற பரிசுத்தர். அவரு டைய நீதி நித்திய நீதி. தேவனா னவர், தம்முடைய கிரியைகளை குறித்து எந்த மனிதனுக்கும் நியா யப்படுத்த வேண்டிய அவசியமி ல்லை. ஆனால், தேவனுடைய கிரி யைகளை குறித்து தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருப்பது மனித னுக்கு அவசியமானது. நாம் தேவனுக்காகவும், அவனுடைய நீதிக்காகவும் வழக்காடத் தேவையில்லை. நாம் அவருடைய பாதுகாவலர்களாக இருப்பதற்கு அவர் கல்லும், மண்ணும், இரும்பும், சித்திரமுமான விக்கிரகங்கள் அல்லர். அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். இந்த உலகத்தின் போக்கிலே வாழும் மனிதர்கள் பெருமையானவைகளை பேசி, அவர்கள் அறியாத தேவனுடைய மகத்துவங்களை தூஷக்கின்றார்கள். தேவனோ, மனித குலமானது நித்திய ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படா தபடிக்கு, தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் மீட்பர் இயேசுவை ஒப்புக்கொடுத்திருக்கின்றார். மீட்பராகிய இயேசுவின்மேல் விசுவாசமுள்ளவர்களுக்கு அவர் மிகுதியான யாவற்றையும் அருள் செய்கின்றார். பிரியமானவர்களே, மற்ற மனிதர்களுடைய வாழ்க்கையிலும், சமுதாயத்திலும், சபை ஐக்கியங்களிலும், பட்டணங்களிலும், தேசங்களிலும், உலகத்திலும் நடப்பவைகளை; நியாயப்படுத்துவது நமக்குரிய காரியமல்ல. அவர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்;. அவர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனை வரும் அவருடைய கரத்தின் கிரியைகள். எனவே, நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களிலே, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதே நமக்குரியதாக இருக்கின்றது. கடந்த சில நாட்களாக, தேவனுடைய நீதியையும், நியாய த்தீர்ப்பையும், கணக்கு ஒப்புவித்தலையும் குறித்த காரியங்களின் ஒரு பகுதியை தியானித்தோம். எனவே, கர்த்தர் வரும் நாளிலே அவருக்கு பிரியமான கணக்கை ஒப்புவிக்கின்ற நல்ல உக்கிராணக் காரனைப் போல, தேவனுடைய சித்தத்தை நம்முடைய வாழ் விலே நிறைவேற்றுவோமாக.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, நான் குயவன் கையிலுள்ள களிமண் என்பதை உணர்ந்தவனாய், நீர் என்னை உருவாக்கி உருமாற்ற உம்முடைய வார்த்தைக்கு கீழ்படிந்து வாழ பொறுமையுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளி 22:12