புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 28, 2022)

என்னை குறித்த கணக்கு

ரோமர் 14:12

ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.


ஒருவன் தன் தோட்டத்த்திலே சில மாமரங்களை நட்டிருந்தான். அவைகள் கனிதரும் பருவத்திற்கு வந்த போது, அதில் சில மரங்களில் கனியொன்றையும் காணவில்லை. வேறு சில மரங்களில், கனிகள் இருந்த போதும், அவை சுவைப்பதற்கு உகந்ததாக இருக்கவில்லை. இன்னும் சில மரங்கள்; மிகவும் சுவையான கனிகளைக் கொடுத்தது. நீங்கள் அந்த தோட்டக்காரனாக இருந் தால், அந்த மரங்களில் எவைகளை உங்கள் தோட்டத்திலே வைத்திருப் பீர்கள்? நல்ல கனி கொடாத மரங்க ளையும், சுவையற்ற கனிகளை கொடுக்கும் மரங்களையும் எவ்வளவு காலம் விட்டு வைப்பீர்கள்? ஒரு மனுஷன், தன் வேலைக்காரர்களை அழைத்து, அவர்களுக்குரிய அதிகாரத்தையும், பொருளாதாரத்தையும், ஆதரவையும் வழங்கி, அவர்கள் செய்ய வேண்டிய வேலையை அவர்களுக்கு கொடுத்து தூர தேசத்திற்கு சென்றிருந்தான். அவன் திரும்பி வந்த போது, சிலர் தங்கள் பொறுப்பை முழுமனதோடு நிறைவேற்றியிருந்தார்கள், வேறு சிலர், அரை மனதோடு எஜமனனானவன் கொடுத்ததை அப்படியே வைத்திருந்தார்கள், இன்னும் சிலர், எஜமானனானவனுடைய முதலீட்டை அழித்துப்போட்டார்கள். நீங்கள் அந்த மனுஷனாக இருந்தால், திரும்பி வரும் போது, இவர்கள் ஒவ் வொருவருக்கும் என்ன செய்வீர்கள்? எவ்வளவு காலம் பொறுமையாக இருப்பீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள். நீடிய பொறுமையுள்ளவராக இருக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு, மனிதர்கள் யாவரும் கணக்கு கொடுக்கும் நாள் ஒன்று உண்டு. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்பு விக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 12:36-37). ஓவ்வொரு மனிதனும் அவனவனிடத்தில் கொடு க்கப்பட்ட தாலா ந்துகளைக் குறித்து கணக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் (மத்தேயு 25:19). ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வையும், தன் கிரியைகளையும் குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும் (ரோமர் 14:12). கிருபையின் நாட்களிலே வாழுகின்ற நாம், இந்த யாத்திரையிலே தனித்து விடப்ப டவில்லை. தேவ ஆவியானவர் நமக்கு துணை நிற்கின்றார். எனவே, நம்முடைய வாழ்க்கையிலே காலம் கடந்து போகும் முன்னதாக நம்முடைய கணக்குகளை சரி செய்து கொள்வோமாக. பின்பு அல்லது நாளை என்று தள்ளிவிடாமல் இன்றே கிரியைகளை நடப்பியுங்கள்.

ஜெபம்:

என்னை உமக்கென்று தெரிந்து கொண்ட தேவனேஇ இந்த பூமியிலே எனக்கு கொடுக்கப்பட்ட நாட்களை ஞானமாக பயன்படுத்தும்படிக்கு நீர் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 90:11-12

Category Tags: