புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 27, 2022)

உலகத்தால் உண்டாகும் நிந்தைகள்

1 பேதுரு 4:17

நியாயத்தீர்ப்பு தேவனு டைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது;


பிரியமானவர்களே, கிறிஸ்துவுக்கு பிரியமான வாழ்க்கை வாழ நீங்கள் உங்களை அர்ப்பணிக்கும் போது, இந்த உலகத்தாலும், உங்களை சூழவுள்ள மனிதர்களாலும் ஏற்படும் உபத்திரவங்களைக் குறித்து, ஏதோ புதுமையென்று திகையாமல், ஆச்சரியப்படாமலும், கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாயிருங்கள். சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிக ளுடைய இஷ;டத்தின்படி நடந்துகொண் டது போதும்; அப்பொழுது நாம் காம விகாரத்தையும் துர்இச்சைகளையும் நட ப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டு ச்செய்து, வெறிகொண்டு, அருவருப் பான விக்கிரகாராதனையைச் செய்து வந்தோம். ஆனாலும், அந்தத் துன்மா ர்க்க உளையிலே அவர்களோடேகூட விழாமலிருக்கிறதினாலே அவர் கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷpக்கிறார்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவ னுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங் கியிருக்கிறார்;. உலகத்தாலே அவர் தூஷpக்கப்படுகிறார்;, ஆனால் கிறி ஸ்துவின் நிமித்தம் நீங்கள், உலகத்தால் உண்டாகும் நிந்தைகளை சகித்துக் கொண்டிருப்பதால் உங்களாலே அவர் மகிமைப்படுகிறார். எனினும் நமக்கு ஏற்படுகின்ற பாடுகளும் நிந்தைகளும் நம் பாவங்களி னாலும், தேவனுக்கு பிரியமில்லாத சமரசனமான வாழ்க்கை வாழ்வதா லும் உண்டாகக் கூடாது. நம்மை நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொண்டு, சாட்சியற்ற வாழ்க்கை வாழ்ந்து வரும் போது பலர் நம்மை நிந்திப்பார்கள். அது மட்டுமல்லாமல், நம்முடைய கனியற்ற வாழ்க்கை யினால், தேவனுடைய நாமம், தேவனை அறியாதவர்கள் மத்தியிலே நம் மூலமாய்த் தூஷpக்கப்படும். 'ஆதலால் உங்களில் ஒருவனும் கொலை பாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவ னா யாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக் கொண்டவனாயாவது பாடுபடுகிற வனாயிருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்ப டுத்தக் கடவன் (1 பேதுரு 4:15-16)' நாம் நமக்குண்டான அழைப்பையும், தேவ னுடைய பிள்ளைகளாக இருப்பதினாலே, தேவனுடைய வீட்டார் என்ற மேன்மையான பதவியையும் தரித்தவர்களாக இருக்கின்றோம் என்பதை யும் மறந்து போய்விடக்கூடாது. நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது. எனவே அழைக்கப்பட்ட அழை ப்பிற்கு பாத்திரராக மாத்திரம் நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, நீர் எனக்கு கொடுத்திருக்கின்ற இத்தனை மகத்துவமுள்ள பதவியை குறித்து நான் கரிசனையற்றவனாய் வாழாதபடிக்கு உணர்வுள்ள இருயதத்தை தந்து வழிநடத்த்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:1-3