புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 26, 2022)

தன் வீட்டை சுத்தமாக்குபவர்

நீதிமொழிகள் 28:13

தன் பாவங்களை மறை க்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்.


ஒரு ஊரை அரசாண்டு வந்த அரசனானவன், நீதியுள்ளவன் என்றும், நியாயமாக காரியங்களை நடப்பிக்கின்றவன் என்றும் ஜனங்கள் மத்தியிலே அவனுடைய ஆட்சியைக் குறித்த நல்ல அபிப்பிராயம் இருந்து வந்தது. ஒரு நாள் அவனுடைய குமார்களிலொருவனோ, ஊரிலுள்ள குடும்பமொன்றிற்கு அநியாயம் செய்துவிட்டான். இந்தக் காரியமானது, அவனுடைய தந்தையாகிய அரசனா னவனுக்கு தெரிய வந்த போது, அரச னானவன் மிகவும் குழப்பமடைந்தான். 1. தான் நீதியுள்ளவன் என்று ஜனங்கள் மத்தியிலே இருக்கும் அபிப்பிராயம் நீடித்திருக்க வேண்டும். 2. தன் குமார னானவனை குற்றவாளியாக தீர்க்கா மல் அவனை எப்படியாவது காப்பாற் றிவிட வேண்டும் என்ற இரண்டு காரிய ங்கள் அவன் மனதை அழுத்திக் கொண் டிருந்தது. அதனால், அந்த அரசனானவன், தன் ஆட்சியை விரும்பாத சில துரோகிகள், தன் குமாரனானவன்மேல் அநியாயமான பழியை சுமத் தியிருக்கின்றார்கள் என்ற செய்தியை ஊர் மக்கள் மத்தி யிலே அறிவி க்கும்படிக்கு, பொய் சம்பவத்தை மேடையேற்றினான். இதனிமித்தம் ஊரு க்கு நீதி செய்து வந்தவன், தன் வீட்டிலே நீதியை நிலைநாட்ட முடியா தவனானான். பொதுவாக மனிதர்கள் மத்தியிலே, தாயின் பாசம், தந்தை யின் நேசம் பிள்ளைகளை காத்துக் கொள்ளும்படிக்கு, அவர்கள் மனக் கண்களை குருடாக்கிவிட்டது என்று கூறிக் கொள்வதை நாம் கேட்டி ருக்கின்றோம். தாய் பாசம், தந்தையின் நேசம் தங்களுடைய பிள்ளை களை பாதுகாக்க வேண்டுமென்பதற்காக எதையும் செய்யலாம் ஆனால் அதனால் தேவனுடைய பார்வையிலே அநியாயமானது நியாயமாக வும், நியாயமானது அநியாயமாகவும் ஒருபோதும் மாறிவிடுவதில்லை. நாம் பிதாவாகிய தேவுவனுடைய பிள்ளைகளாக இருக்கின்றோம். சுத்தம் பண்ணுதல் பரம பிதாவின் வீட்டிற்குரியது என்பதை நாம் கடந்த தின ங்களிலே தியானித்தோம். நாம் அவருடைய வீட்டாராக இருப்பதினால், அவர் நமக்காக நீதியை அநீதியென்றும், அநீதியை நீதியென்றும் கூறு பவர் அல்ல. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்;. பிதாவாகிய தேவன் மன்னிப்பின் மாட்சிமை நிறைந்தவர் அதனால் நாம் நம் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடும் போது, அவர் தமது இரக்கத்தை நம்மேல் ஊற்றுகின் வராயிருக்கின்றார். எனவே அவரு டைய சமுகத்திலே, ஒரு போதும் நம் குற்றங்களை மூடி மறைக்கால், அறிக்கையிட்டு விட்டுவிடுவோமாக.

ஜெபம்:

உம்முடைய பிள்ளையாக என்னை தெரிந்து கொண்ட தேவனே, உம்மிடத்தில் நான் என் வாழ்வின் உண்மை நிலைமையை அறிக்கையிட்டு, உம் இரகத்தை பெற்று வாழும்படி பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:9