புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 25, 2022)

எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு

எபிரெயர் 12:1

நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;


'இது ஏன் என் வாழ்க்கையில் நடைபெற்றது? அது ஏன் எனக்கு அப்படி யாக நடக்கின்றது?' என்று உங்கள் வாழ்வில் நடக்கும் பின்னடைவு களையோ அல்லது சில உபத்திவரங்களையோ குறித்த காரணத்தை நீங் கள் என்னிடம் கேட்பீர்களானால், 'அதனுடைய காரணம் எனக்கு தெரி யாது, அதை நியாயந்தீர்ப்பது என்னுடைய காரியமுமல்ல' என்பதே என்னுடைய பதிலாக இருக்கும். தேவ னாகிய கர்த்தர் ஒருவரே சகலவற்றை யும் அறிந்தவராக இருக்கின்றார். அவர் நம்முடைய பரம தந்தையாத லால், நாம் இந்த உலகத்தில் இருக் கும்வரைக்கும், நாம் அதிக கனிகளை கொடுக்கும்படிக்கு அவர் நம்மை சுத்தம்பண்ணுகின்றவராயிருக்கின்றார் (யோவான் 15:1-2);. அவர் நம்மை சுத்தம் செய்யும் போது, சிட்சையும், கண்டிப்பும், சில தண்டனைகளும் கூட நமக்கு உண்டாகலாம் என கட ந்த நாட்களிலே தியானம் செய்தோம். ஆனால் அவையொன்றும் அழிவு க்குரியவைகள் அல்ல. இந்த நாட்களிலே, தேவனுடைய கண்டிப்பை யும், சிட்சையையும், தேவ நீதியையும், அவருடைய நியாயத்தீர்ப்பையும் குறித்து விளக்கிக் கூறும் ஊழியர்களுகளுக்கு அநேகர் செவிகொடுக்க மனதற்றவர்களாக இருக்கின்றார்கள். அப்படியாக அவர்கள் எச்ச ரிப்பை விரும்பாமல், தங்கள் செவியை அடைத்துக் கொள்வதினால், நம்முடைய வாழ்விலே பிதாவினுடைய சுத்திகரிப்பும், சிட்டையும், கண் டிப்பும் நடைபெறாமல் நின்று போய்விடுவதில்லை. ஏனெனில் நாம் கீழ் ப்படியாமையின் பிள்ளைகளாக வாழ்ந்து தேவ கோபாக்கினைக்கு உட் படுவது தேவனாகிய கர்த்தருடைய சித்தம் அல்லவே. நாம் நாளு க்குநாள் தேவ வசனத்தை தியானித்து தேவ சாயலிலே வளருகின்ற வர்களாகவும், ஆண்டவர் இயேசுவை கிட்டி சேர்கின்றவர்களாக முன் னேற வேண்டும். இந்த உலக போக்கிலே வாழும் மனிதர்கள், தேவ பயமற்றவர்களாக, பல அநியாயங்களை செய்வதை நாம் காண்கின் றோம். சில வேளைகளிலே அந்த அநியாயங்கள் நம்மையும் பாதிக்க லாம். எல் லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. எனவே நீங்களோ, தீமை க்கு தீமை செய்யாமல், தேவநீதி வெளிப்படும் நாள்வரைக்கும், பொறு மை யுள்ளவர்களாக, பாரமான யாவற்றையும், உங்களை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கி றவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, உங்களுக்கு நியமித்தி ருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடுங்கள்.

ஜெபம்:

நீதியாய் நியாயந்தீர்க்கும் தேவனேஇ அவனவன் செய்த நன்மை க்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும் நாள்வரைக்கும்இ பொறு மையோடே நான் முன்னேறிச் செல்ல எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 5:10