புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 24, 2022)

பிரசன்னமாகுதலை வாஞ்சிப்போம்

2 தீமோத்தேயு 4:7

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.


தேவ பிள்ளைகளுடைய வாழ்க்கையிலே ஏற்படும் உபத்திரவங்கள் எல்லாம் தேவனுடைய சிட்சையாகுமா? கிறிஸ்து இயேசுவை நம்பி வாழ்பவர்களின் வாழ்க்கையிலே ஏற்படும் பின்னடைவுகள் எல்லாம் அவர்களுக்குண்டான தண்டனையாகுமா? பவுல் என்னும் தேவ ஊழியர், திருமணமாகாதவராக, கிறிஸ்துவின் இரட்சிப்பின் நற்செய்தியை உலகத்திற்கு அறிவிக்கும்படிக்கு தன்னை முற்றும் முழுவதுமாக அர்ப்பணித்திருந்தார். நற்செய்தி அறிவிக்கும் பணியிலே, தனக்கு ஏற்பட்ட பாடுகளைக் குறித்து அவர் விளக்கிக் கூறுகையில், 'யூதர்க ளால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;. மூன்று தரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந் நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திர த்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழி ப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.' என்றார். இவைகள் அவருக்கு ஏற்பட்ட சிட்சைகளல்ல, தண்டனைகளுமல்ல. அப்போஸ்தலராகிய பவுல், ஆண்டவராகிய இயேசுவின் பாடுகளின் ஐக்கியத்தில் இணை ந்தவராக, தனக்கு இந்த உலகிலே லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ;டமும் குப்பபையுமென தள்ளிவிட்டு, கிறிஸ்துவின் நிமித்தம் வந்த நிந்தனைகளையும், துன்பத்தைம் சகித்துக் கொண்டு, விசுவாசத்திலே நல்ல போராட்டத்தை போராடினார். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளு வார்; என்ற நிச்சமுடையவராக இருந்தார். கருபொருளாவது, இது சிட் சையா, அது தண்டனையா என்று மற்றவர்களை குறித்து நாம் நியாயந் தீர்க்காமல், நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தராகிய இயேசுவிடமி ருந்து, நீதியின் கீரிடத்தை பெற்றுக் கொள்ளும்படி அவருடைய பிரசன் னமாகுதலை வாஞ்சித்து முன்னேறுவோமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, நீதியின் பாதையிலே நடக்கும் போது, இந்த உலகத்தினாலே உண்டாகும் பாடுகளினால் சோர்ந்து போகாதபடிக்கு கிறிஸ்துவின் பிரசன்னமாகுதலை நாடி ஓட பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:11